For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#ICC தலைவராகிறாரா ஜெய்ஷா?

03:22 PM Aug 21, 2024 IST | Web Editor
 icc தலைவராகிறாரா ஜெய்ஷா
Advertisement

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐசிசி) தலைவராக ஜெய்ஷா தேர்ந்தெடுக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisement

ஐசிசியின் தலைவராக இருக்கும் கிரெக் பார்க்லேவின் பதவிக் காலம் வரும் நவம்பர் 30-ம் தேதியுடன் முடிவடைகிறது. புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகளை ஐசிசி நிர்வாகம் தொடங்கியுள்ளது. 2 ஆண்டுகள் பதவிக் காலம் கொண்ட ஐசிசி தலைவர் பதவியில் ஒருவர் 3 முறை வகிக்கலாம்.

கிரெக் பார்க்லே, தொடர்ந்து 2 முறை ஐசிசி தலைவராக உள்ள நிலையில், 3-வது முறை போட்டியிடப் போவதில்லை என்று நேற்று (ஆகஸ்ட் - 20ம் தேதி) அறிவித்தார்.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளரும், மத்திய உள்துறை அமைச்சர் ஜெய்ஷாவின் மகனுமான ஜெய் ஷா, ஐசிசி தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள் : #StopHarassment: பாலியல் வன்கொடுமைக்கு எதிராக குரல் கொடுத்த நடிகைக்கும் பாலியல் மிரட்டல்!

ஐசிசி தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்ய ஆகஸ்ட் 27ம் தேதி கடைசி நாள் என்பதால், ஜெய் ஷா போட்டியிடுவாரா? என்பது இந்த வாரத்துக்குள் தெரிந்து விடும். சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தலைவர் பதவிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்யலாம். ஒருவருக்கு மேல் வேட்புமனுத் தாக்கல் செய்யும் பட்சத்தில் டிசம்பர் 1ஆம் தேதி தேர்தல் நடைபெறும்.

ஐசிசியின் செல்வாக்குமிக்க முகமாக உள்ள ஜெய் ஷா, நிதி மற்றும் வணிக விவகாரங்கள் துணைக் குழுவின் தலைவராக உள்ளார். ஜெய் ஷா போட்டியிட்டால் அனைத்து உறுப்பினர்களும் ஆதரவளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஐசிசி தலைவராக ஜெய் ஷா தேர்ந்தெடுக்கப்பட்டால், மிக இளம் வயதில் அதாவது 35 வயதில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் என்ற பெருமை பெறுவார்.

Tags :
Advertisement