கந்த சஷ்டி திருவிழா! தங்கச் சப்பரத்தில் எழுந்தருளிய ஜெயந்திநாதர்! #Tiruchendur -ல் குவியும் பக்தர்கள்!
திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழாவின் 3-ஆம் நாள் யாகசாலை பூஜைகள் இன்று (நவ.4) நடைபெற்று சுவாமி ஜெயந்திநாதர் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறக்கூடிய
முக்கிய விழாக்களில் ஒன்றான கந்தசஷ்டி திருவிழா கடந்த 2-ந் தேதி காலை
யாகசாலை பூஜையுடன் கோலகலமாகத் தொடங்கியது. தொடர்ந்து 7 நாட்கள் வெகு
விமரிசையாக நடைபெறக்கூடிய கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான
சூரசம்ஹாரம் வரும் 7-ம் தேதி நடைபெறுகிறது. கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு
தமிழ்நாடு மட்டுமல்லாது பல்வேறு வெளி மாநிலங்கள், மற்றும் வெளி நாடுகள்
இருந்தும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து வருகின்றனர்.
நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் அங்கப்பிரதட்சிணம் செய்தும், அடிப்பிரதட்சணம்
செய்தும் வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர். தொடர்ந்து 3-ம் நாளான இன்று
யாகசாலை மண்டபத்தில் யாகசாலை நடைபெற்று பூர்ணாகுதி நடைபெற்று மகாதீபாராதனை
நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலை மண்டபத்தில் வைத்து சுவாமி ஜெயந்திநாதர்க்கு பால், பழம் , பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகம் நடைபெற்று சிறப்பு தீபாரதனை நடைபெற்றது. சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானை அம்பாளுடன் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருல்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு
சாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படியுங்கள் : “சிறுவயது கிராமத்து நினைவுகளை மீண்டும் கொண்டுவந்தது #Meiyazhagan!” – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் புகழாரம்!
கந்தசஷ்டி திருவிழா தொடங்கிய நாள் முதல் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள்
நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் வசதிக்காக கந்த சஷ்டி திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தையும் நியூஸ்7 தமிழ் சார்பில் பல்வேறு இடங்களில் பெரிய அகன்ற திரைகள் வைத்து ஒளிபரப்பபு செய்யப்பட்டு வருகிறது. மேலும் கந்தசஷ்டி நிகழ்ச்சிகள் அனைத்தையும் நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி மற்றும் நியூஸ் 7 தமிழ் பக்தி யூடியூப் சேனலில்
நேரலையாக காணலாம்.