For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜெயம் ரவி மனைவி!

07:04 PM Jun 21, 2024 IST | Web Editor
விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜெயம் ரவி மனைவி
Advertisement

ஜெயம் ரவியும் அவரது மனைவி ஆர்த்தியும் விவாகரத்து பெற உள்ளதாக சமூக வலைதள பக்கங்களில் தகவல் பரவிய நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஜெயம் ரவியின் மனைவி.

Advertisement

நடிகர் ஜெயம் ரவி தமிழில் ஜெயம் என்ற படத்தில் அறிமுகமானார்.  முதல் படத்தில் தனது அபார திறமையை வெளிப்படுத்தியதை அடுத்து அந்தப் படத்தின் பெயரை இவரது பெயருக்கு முன்னால் அடைமொழியாக இணைந்து கொண்டது.  இந்த படத்தை அடுத்து இவர் எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்தில் நடித்தார்.

இதனை அடுத்து இவர் தனது வித்தியாசமான நடிப்பை தனி ஒருவன் படத்தில் வெளிப்படுத்தியதை அடுத்து இவருக்கு ரசிகர்களின் வட்டாரம் அதிகரித்தது. இவர் பூலோகம், நிமிர்ந்து நில்,  தில்லாலங்கடி, சந்தோஷ் சுப்பிரமணியம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

தற்போது காதலிக்க நேரமில்லை, பிரதர், ஜீனி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவர் பிரபல தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியை காதலித்து கடந்த 2009-ஆம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு 2 மகன்களும் உள்ளனர். ஒருவர் டிக் டிக் டிக் படத்தில் நடித்தும் இருக்கிறார்.  இதனிடையே, ஜெயம் ரவியும் அவரது மனைவி ஆர்த்தியும் விவாகரத்து பெற உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்த நிலையில் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஜெயம் ரவியின் மனைவி.

ஜெயம் ரவி நடிகராக அறிமுகமான  ‘ஜெயம்’  படம் வெளியாகி 21 ஆண்டுகள் கடந்துள்ளது.  இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள  ‘காதல் என்னும் வார்த்தை அது வார்த்தை அல்ல வாழ்க்கை’  என்ற பாடல் வரிகளை குறிப்பிடும் புகைப்படம் ஒன்றைத் தனது சமூகவலைதளப் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.  இதன் மூலம் விவாகரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஆர்த்தி ரவி.

Tags :
Advertisement