ஜேசன் சஞ்சய் - சந்தீப் கிஷன் படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியீடு!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கராக வலம் வருபவர் நடிகர் விஜய். அவர் தற்போது அரசியலில் இறங்கியுள்ளார். விஜய் நடிப்பில் 2009-ம் ஆண்டு வெளியான வேட்டைக்காரன் திரைப்படத்தில் வரும் ‘நான் அடிச்சா தாங்க மாட்ட’ பாடலில் விஜயின் மகன் ஜேசன் சஞ்சயின் நடனம் பலரது கவனத்தை ஈர்த்தது. அதன்பிறகு, பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக சஞ்சய் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பட்டப்படிப்புக்காக அவர் வெளிநாடு சென்றார்.
இதையும் படியுங்கள் : “ஆபரேஷன் சிந்தூரை வரவேற்கிறோம், ஆனால்..” – மத்திய அரசுக்கு திருமாவளவன் எம்.பி. கோரிக்கை!
இந்த சூழலில், விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார். இவருடைய படத்தினை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இத்திரைப்படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கிறார். எஸ்.தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் சமீபத்தில் தொடங்கியது. சந்தீப் கிஷனின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
நடிகர் சந்தீப் கிஷன் இன்று தனது 38-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு, இப்படக்குழு கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. இப்படத்தின் அடுத்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.