மல்லிகை கிலோ ரூ.5000... விவசாயிகள் மகிழ்ச்சி!
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பூ சந்தையில் மல்லிகை பூவின் விலை ரூ.1500 இல் இருந்து ரூ.5000 ஆக உயர்ந்துள்ளது.
மல்லிகைப் பூ எவ்வளவு விலைக்கு விற்றாலும் அதை வாங்கித் தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் கல்யாண வீட்டுக்காரர்களுக்கு ஏற்பட்டுள்ளது. மணப்பெண் மல்லிகைப் பூ சூடிக்கொள்ள வேண்டும் என்ற சூழலில் விலை அதிகமாக இருந்தாலும் அதனை திருமண வீட்டுக்காரர்கள் மார்க்கெட்டிற்கே சென்று கிலோ கணக்கில் வாங்கிச் செல்கின்றனர். அதேபோல் காதுகுத்து, பூப்புனித நீராட்டு விழா என பல சுபநிகழ்ச்சிகளுக்கும் மல்லிகை பூ அவசியம் தேவை என்பதால் அதன் விலை குறைய வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.
தை மாதம் முழுவதும் ஏராளமான சுபமுகூர்த்த நாட்கள் வருவதால் மல்லிகை பூவின் விலை குறைய வாய்ப்பே இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. பனிப்பொழிவு குறைந்த பிறகு தான் மல்லிகை சாகுபடி நல்ல முறையில் வரும் என்றும் வரத்து அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.
அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள தோவாளை மலர் சந்தை தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மிகவும் பிரபலமான பூச்சந்தைகளில் ஒன்று. இங்கிருந்து கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரள மாநிலத்திற்கும் பூக்கள் கொண்டு செல்லப்படுவது வழக்கம்.
அதே போன்று மதுரை, ஓசூர், ராயக்கோட்டை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெங்களூர் போன்ற பகுதிகளிலிருந்தும் இங்குப் பூக்கள் கொண்டு வரப்பட்டு மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பண்டிகை காலங்களில் தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்வது வழக்கம். அந்த வகையில் தற்போது கோவில் திருவிழாக்கள் சுபமுகூர்த்த தினம் உள்ளதாலும்.
பனிப்பொழிவு காரணமாக பூக்களின் உற்பத்தி குறைந்ததால் பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்து உள்ளது. இன்றைய நிலவரப்படி ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை
செய்யப்பட்ட மல்லிகைப்பூ 5000 ஆக விலை உயர்ந்துள்ளது அதேபோல ஆயிரம் ரூபாய்க்கு
விற்பனை செய்யப்பட்ட பிச்சி பூ இன்று 2500 ரூபாயாக விலை ஏற்றம் காணப்பட்டது .
100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ரோஜா பூவானது 180 ஆக விலை உயர்ந்து
காணப்பட்டது , 150 ரூபாய்க்கு வித்த சிவந்திப்பூ 200 ஆக விலை உயர்ந்தது . 50
ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வாடாமல்லி 100 ரூபாயாக விலை உயர்ந்து
காணப்பட்டன. சம்பங்கி 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது 500 ரூபாயாக விலை
ஏற்றம் காணப்பட்டது . கனகாம்பரம் ஆயிரத்திலிருந்து 3000 ஆக உயர்ந்துள்ளது
இவ்வாறு அனைத்து பூக்களுமே மூன்று மடங்கு நான்கு மடங்கு அளவில் விலை உயர்வு
ஏற்பட்டுள்ளது. பூக்களின் தேவை அதிகரிப்பால் விற்பனை களைகட்டி உள்ளது.