#Japan | உலகையே உலுக்கிய சம்பவம்… சுமார் 80 ஆண்டுகளுக்கு பிறகு வெடித்த குண்டு!
ஜப்பானில் இரண்டாம் உலகப்போரின் போது புதைக்கப்பட்ட குண்டு நேற்று தீடீரென வெடித்து சிதறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு ஆசிய நாடான ஜப்பானில், தென் மேற்கு பகுதியில் மியாசாகி விமான நிலையம் உள்ளது. இரண்டாம் உலகப் போரின் ஜப்பான் மீது அமெரிக்கா ஆயிரக்கணக்கான குண்டுகளை வீசியது. அப்போது வீசப்பட்ட நுாற்றுக்கணக்கான டன் வெடிகுண்டுகள், ஜப்பானை சுற்றி புதைந்து கிடக்கின்றன. சில சமயங்களில், கட்டுமானப் பணிகளின் போது வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்படுகின்றன.
இந்த நிலையில், மியாசாகி விமான நிலையத்தில் புதைக்கப்பட்டிருந்த இரண்டாம் உலகப் போரின் போது வெடிக்காத அமெரிக்க வெடிகுண்டு நேற்று திடீரென வெடித்தது. இதில் ஓடு பாதையில் பள்ளம் ஏற்பட்டது. இதனையடுத்து, புறப்படவிருந்த மற்றும் தரையிறங்க இருந்த அனைத்து விமானங்களும் உடனடியாக நிறுத்தப்பட்டன. அதன்படி, நேற்று மட்டும் 80 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டதாக ஜப்பான் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், "500 பவுண்டுகள் எடையுள்ள அமெரிக்க வெடிகுண்டு திடீரென வெடித்தது. இதனால், ஓடுபாதையில் பள்ளம் ஏற்பட்டது. 'வெடிகுண்டு வெடித்த போது அருகில் எந்த விமானங்களும் இல்லை. மேலும், யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. 'இந்த சம்பவத்தால், 80க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன."
இவ்வாறு விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.