'சிறையில் இருந்து கொண்டே வெற்றி பெற்ற எம்பி ரஷீத் பதவியேற்க தடை இல்லை' - என்ஐஏ ஒப்புதல்!
சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்துல் ரஷீத் ஷேக் எம்.பி.யாக பதவிப் பிரமாணம் செய்ய என்ஐஏ ஒப்புதல் அளித்துள்ளது.
நாடு முழுவதும் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 234 தொகுதிகளையும் கைப்பற்றியது. இதனையடுத்து கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்றார்.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா தொகுதியில் போட்டியிட்ட தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சருமான ஒமர் அப்துல்லா தோல்வி அடைந்துள்ளார். இவரை எதிர்த்து NIA-வால் குற்றம் சாட்டப்பட்டு 2019 முதல் சிறையில் இருக்கும் ரஷீத், சுயேட்சையாக போட்டியிட்டு சுமார் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இதையும் படியுங்கள் : 'தங்கலான்’ அப்டேட் கொடுத்த இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!
கடந்த ஜூன் 29ம் தேதி, ரஷீத்தின் பதவிப் பிரமாணத்தை எளிதாக்குவதற்காக அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என கோரிய மனுவிற்கு பதிலளிக்குமாறு கூடுதல் செஷன்ஸ் நீதிபதி கிரண் குப்தா, என்ஐஏ-வுக்கு உத்தரவிட்டார். மேலும், ஜூலை 1ம் தேதிக்குள் என்ஐஏ பதில் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், இன்று அதற்கு என்ஐஏ பதிலளித்துள்ளது. இதற்கிடையே, சிறையில் அடைக்கப்பட்டுள்ள பொறியாளர் அப்துல் ரஷீத் ஷேக் எம்.பி.யாக பதவிப் பிரமாணம் செய்ய என்ஐஏ ஒப்புதல் அளித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி நீதிமன்றம் இறுதி உத்தரவு வழங்கியதும் நிறைவேற்றப்படும் எனவும் என்ஐஏ தெரிவித்துள்ளது. பொறியாளர் அப்துல் ரஷீத் ஷேக் எம்.பி.யாக பதவிப் பிரமாணம் செய்வது குறித்து டெல்லி நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.