ஜமைக்கா துப்பாக்கிச்சூடு - தாயகம் கொண்டு வரப்பட்டது நெல்லை இளைஞர் உடல்!
ஜமைக்கா நாட்டில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த நெல்லை இளைஞரின் உடல் சொந்த ஊரான திருநெல்வேலிக்கு கொண்டு வரப்பட்டது.
11:03 AM Mar 04, 2025 IST | Web Editor
Advertisement
ஜமைக்கா நாட்டில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் கடந்த ஆண்டி டிசம்பர் மாதம் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கிச்சூட்டில், திருநெல்வேலி மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த 31 வயதான விக்னேஷ் என்ற இளைஞர் இறந்தார்.
Advertisement
அவரது உடலை சொந்த ஊர் கொண்டுவர 25 லட்சம் ரூபாய் செலவாகும் என கூறப்பட்டது. இதுகுறித்து அறிந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஜமைக்காவில் உள்ள இந்திய தூதரகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி இளைஞரின் உடலை சொந்த ஊர் கொண்டுவர நடவடிக்கை எடுத்தார்.
இந்நிலையில் ஏறத்தாழ 3 மாதத்திற்கு பிறகு அவரது உடலானது சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.