சென்னையில் ஜல்லிக்கட்டா? நடிகர் #Karthi கூறுவது என்ன?
ஜல்லிக்கட்டு என்பது சாதாரண விஷயம் அல்ல என நடிகர் கார்த்தி கூறியுள்ளார்.
சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ‘செம்பொழில்’ என்ற பெயரில் கிராமத்து திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று, இன்று, நாளை என மூன்று நாட்கள் இந்த விழா நடைபெற்று வருகிறது. இதனை நடிகரும், உழவன் பவுண்டேஷன் நிறுவனருமான கார்த்தி தொடங்கி வைத்தார். மேலும் அங்கு காட்சிப்படுத்திய நாட்டு மாடு, ஆடு வகைகளை பார்வையிட்டு கலைஞர்களோடு ஆடி மகிழ்ந்தார்.
இந்த திருவிழாவில் பாரம்பரிய உணவு வகைகள், தானிய வகைகள், விவசாயம் சார்ந்த
புத்தகங்கள், மரங்களால் ஆன கைவினை பொருட்கள், மாட்டு வண்டி, குதிரை வண்டி, பானை
அடித்தல், இள வட்டக்கல் உள்ளிட்டவை வைக்கப்பட்டு கிராமத்தை கண் முன்
காட்சிப்படுத்தும் விதமாக 200க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக காங்கேயம் , புலிக்குளம், மலை மாடு, உம்பளச்சேரி, ஆலம்பாடி, பர்கூர்
உள்ளிட்ட 20 வகையான நாட்டு மாடுகளும்; கன்னி, சிப்பிப் பாறை, ராஜபாளையம் என 6 வகையான நாய்களும்; மேச்சேரி, ராமநாதபுரம் வெள்ளை, வெம்பூர் உள்ளிட்ட 13 வகையான ஆடுகள், மூன்று வகையான கோழிகள் அதேபோல மூன்று வகையான குதிரை உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டது. மேலும் தப்பாட்டம், சிலம்பாட்டம், அரிவாள் ஆட்டம், தெருக்கூத்து உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன்
பார்த்து ரசித்து சென்றனர்.
இதற்கு முன்னதாக விழாவை தொடங்கி வைத்த நடிகர் கார்த்தி பேசியதாவது;
கோடை விடுமுறை என்றாலே ஊருக்கு போக வேண்டும் என ஆசையாக இருக்கும். கிராமத்தில்
இருந்து வெளியே வர மனசே வராது. அழுகையாக வரும். அதைப்போல ஒரு திரைப்படமாக
மெய்யழகன் கதை அமைந்ததால் அதற்காகவே ஆசைப்பட்டு நடித்தேன்.
கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்திற்கு பிறகு விவசாயிகளுக்கும், விவசாயம் சார்ந்து இயங்கக் கூடியவர்களையும் அழைத்துப் பேச வேண்டும் என நினைத்தோம். அப்போது இங்கு இருக்கக்கூடிய அனைவரையும் அழைத்து பேசினோம். அவர்கள் எங்களுக்கு ஆலோசகர்களாகவும் இருந்தார்கள்.
சென்னையில் இதுபோன்ற திருவிழா நடந்து மிக நீண்ட நாட்கள் ஆகிவிட்டது.
கொரோனாவிற்கு பிறகு அனைவரையும் ஒன்று சேர்ப்பது மிக கடினமான ஒன்றாக
மாறிவிட்டது. சென்னையில் தான் நுகர்வோர்கள் அதிகமாக உள்ளனர். தமிழ்நாட்டில் எட்டு கோடி பேர் இருந்தார்கள் என்றால் 2 கோடி பேர் சென்னையில் தான் உள்ளனர். எனவே அவர்களுக்கு இதுபோன்ற திருவிழாக்களில் கண்முன் இருக்க வேண்டும் என நினைத்தோம்.
இப்படி தமிழ் பாரம்பரியத்தை பற்றி தெரிந்து கொள்ள இது போன்ற விழாக்கள் தேவைப்பட்டது. மக்களுக்காக குழந்தைகளுக்காக இதுபோன்ற விழாக்களை ஒருங்கிணைத்த இந்த குழுவிற்கும் நன்றி. சென்னையில் இப்படி ஒரு திருவிழா நடப்பது மிக அரிது. என்னுடைய குடும்பத்தாரையும், குழந்தைகளையும் இங்கு வரவழைக்க உள்ளேன். இந்த நிகழ்வை அவர்கள் இழந்து விடக்கூடாது. கிராமத்திற்கு செல்வதும், கிராமத்தில் நடைபெறும் விழாக்களுக்கும் அழைத்துச் சென்று அவர்களுக்கு காண்பிப்பதும் அரிதான ஒன்றாக மாறிவிட்டது.
எனவே சென்னையில் நடைபெறும் இந்த விழாவில் அனைவரையும் அழைத்து வந்து கண்டு
களியுங்கள். இந்த விழாவில் 20 வகையான மாடுகள், கோழிகள், ஆடுகள், குதிரைகள்
காட்சிப்படுத்தியுள்ளனர். இங்கு பாரம்பரிய அரிசி வகைகள் கிடைக்கும் அதை
வாங்கிச் செல்லலாம், தானியங்கள் கிடைக்கிறது. ஸ்பெயின் போன்ற வெளிநாடுகளில் மாட்டை காயப்படுத்துவார்கள். ஆனால் ஜல்லிக்கட்டு என்பது ஏறு தழுவுதல், மாட்டோடு விளையாடுவார்கள், மெய்யழகன் படப்பிடிப்பின் போது ஜல்லிக்கட்டை நேரில் பார்த்து ரசித்தேன்.
சென்னையில் உங்கள் தலைமையில் ஜல்லிக்கட்டு நடத்துவீர்களா என்ற கேள்விக்கு
அதற்கு பல உரிமைகளை வாங்க வேண்டி உள்ளது. ஆனால் அப்படி ஒன்று நடந்தால்,
சென்னையில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் தன்னுடைய காளை பங்கேற்க வேண்டும் என
பலரும் நினைப்பார்கள் என்றார். மேலும் ஜல்லிக்கட்டு என்பது சாதாரண விஷயம் அல்ல.
மெய்யழகன் படத்தின் போது தான் நான் ஜல்லிக்கட்டு எப்படி எல்லாம் நடக்கிறது என
பார்வையிட்டேன் என்றார். மேலும் வியாபாரிகள் அல்லாது அனேக விவசாயிகள் தங்களுடைய விளைபொருட்களை கொண்டு வந்துள்ளனர். தயவு செய்து மக்கள் நேரில் வந்து இதனை பார்த்து அவர்களை ஊக்குவியுங்கள்” என்றார்.