கோவை ஜல்லிக்கட்டு போட்டி: துண்டான காளையின் கால்கள்... சோகத்தில் உறைந்த வீரர்கள்!
கோவை செட்டிபாளையம் பைபாஸ் அருகே தமிழர் பண்பாட்டு ஜல்லிக்கட்டு பேரவை மற்றும் கோவை மாவட்ட நிர்வாகம் இணைந்து ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தி வருகின்றனர்.
இந்தப் போட்டியில் 800-க்கும் மேற்பட்ட காளை மாடுகளும், 500-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டு வாடிவாசலில் வெளியே வரும் மாடுகளை பிடித்து வருகின்றனர்.
இந்நிலையில் பொள்ளாச்சி அருகே உள்ள ஊஞ்சவேலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த லல்லு பிரசாந்த் என்பவரது மாடு அவிழ்த்து விடப்பட்ட நிலையில், மாடுபிடி வீரர்கள் மாட்டை பிடிக்க முயன்ற போது மாடு வேகமாக ஓடிய போது தடுமாறி கீழே விழுந்துள்ளது. இதில் மாட்டின் இரண்டு கால்களும் உடைந்து துண்டானது.
தொடர்ந்து மயக்க நிலையில் இருந்த மாட்டிற்கு உடனடியாக கால்நடை மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக உடுமலை கால்நடை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.