For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஜாக்டோ ஜியோ உண்ணாவிரத போராட்டம் - தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் ஆதரவு!

ஜாக்டோ ஜியோ உண்ணாவிரத போராட்டத்திற்கு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
02:49 PM Mar 23, 2025 IST | Web Editor
ஜாக்டோ ஜியோ உண்ணாவிரத போராட்டம்    தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் ஆதரவு
Advertisement

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டம் ஈரோட்டில் நேற்று(மார்ச்22) நடைபெற்றது. இதில் மாநிலத்தலைவர் எம்.பி.முருகையன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் சு.சங்கரலிங்கம் கடந்த கால நடவடிக்கைகளை எடுத்துரைத்தார்.

Advertisement

கூட்டத்தில் கலந்து கொண்ட 38 மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் கீழ்கண்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

1. வருவாய்த்துறை அலுவலர்களின் நிலுவைக் கோரிக்கைகளை நிறைவேற்ற புதியதாக பொறுப்பேற்றுள்ள வருவாய் நிர்வாக ஆணையர் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், ஒரு மாத கால அவகாசம் வழங்குவதென்றும், வருகிற ஏப்ரல் 7ஆம் தேதிமாலை மாநிலம் தழுவிய மாவட்ட தலைநகர் ஆர்ப்பாட்டத்தை எழுச்சியாக நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

2.வருவாய்த்துறையில் உள்ள அலுவலக உதவியாளர் காலியிடங்களை நிரப்பிட, முதலமைச்சர் உத்தரவிட்ட பிறகும் இரண்டு ஆண்டுகளாக தாமதம் செய்வதைவிடுத்து உடன் ஆணைகள் வழங்க வேண்டும்.

3. அனைத்து மாவட்டங்களிலும் பேரிடர் மேலாண்மைப் பிரிவில் கலைக்கப்பட்ட முதுநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடன் வழங்கிட வேண்டும்.

4. வருவாய்த்துறையில் நகர்ப்புறங்களில் பொதுமக்களுக்கான சான்றிதழ்களை விரைந்து வழங்கிட, அனைத்து வட்ட மற்றும் கோட்ட அலுவலகங்களில் கூடுதலாக துணை வட்டாட்சியர் (சான்றிதழ்) பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும்.

5. தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு பணிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட 20 துணை ஆட்சியர், வட்டாட்சியர் மற்றும் துணை வட்டாட்சியர் பணியிடங்களை, கலைக்கும் நடவடிக்கைகளை கைவிட்டு, உடன் நிரப்பிட தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) & தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

6. வருவாய்த்துறையில் ePMS (Electronic Promotion Management System) மற்றும் வீட்டுமனை பட்டா உள்ளிட்ட அனைத்து பணிகளிலும் செயற்கையான பணி அழுத்தத்தை உயர் அலுவலர்கள் ஏற்படுத்துகின்றனர். இதனைத் தவிர்த்து ஒவ்வொரு திட்டத்திற்கும் போதிய கால அவகாசம் வழங்கி, அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

7 .வேளாண்மைத்துறை சார்ந்த, Agri Stake பணிகளை மேற்கொள்ள உள்வட்ட வருவாய் ஆய்வாளர்களுக்கு போதிய கால அவகாசமும், இதில் உள்ள சிரமங்களை களைந்திட தமிழ்நாடு அரசு மற்றும் வேளாண்மைத் துறை ஆணையர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

8. பங்களிப்பு ஓய்வூதியம் இரத்து, ஈட்டிய விடுப்பு ஒப்படை ஊதியம், காலிப்பணியிடங்கள் நிரப்புதல் உள்ளிட்ட வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ பேரமைப்பின் சார்பில் இன்று (மார்ச்.23) நடைபெறும் மாவட்டத் தலைநகர் உண்ணாவிரதப் போராட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள், அலுவலக உதவியாளர் முதல் வட்டாட்சியர் வரை, 100% முழுமையாகப் பங்கு கொள்வதென ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

9. வருவாய்த்துறை அலுவலர்களுக்கு சிறப்பு பணி பாதுகாப்பு சட்டம், கருணை அடிப்படை பணி நியமனத்திற்கான உச்ச வரம்பினை மீண்டும் 25% ஆக உயர்த்துதல், அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் (FERA) சார்பில் வருகிற ஏப்ரல் 7ஆம் தேதி முதல் உறுப்பினர் சந்திப்பு & பிரச்சாரம் நடத்துவது எனவும், ஏப்ரல் 25ல்  மாவட்ட & வட்டக் கிளை ஆர்ப்பாட்டத்தை எழுச்சியாக நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

10 . மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் முக்கியத்துறையான வருவாய்த்துறை அலுவலர்களின் நியாயமான நீண்ட நாள் நிலுவை கோரிக்கைகளை, பேச்சுவார்த்தை அடிப்படையில் நிறைவேற்றி சமூகமான சூழலை ஏற்படுத்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட வேண்டும்.

Tags :
Advertisement