ஜெய்ஸ்வால் அதிரடி : பெங்களூருவுக்கு 174 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகல் தொடங்கிய 74வது லீக் ஆட்டத்தில் ஆட்டத்தில் ராஜஸ்தான் பெங்களூரு அணிகள் மோதி வருகின்றன. ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ராஜஸ்தான் பேட்டிங் செய்தது.
20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 75 ரன்கள் அடித்தார். பெங்களூரு தரப்பில் புவனேஷ்குமார், யாஷ் தயால், ஜோஷ் ஹஷுல்வுட், க்ருணால் பாண்டியா தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இதன் மூலம் பெங்களூரு அணிக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரு அணிகளும் தங்களது கடைசி ஆட்டத்தில் தோல்வியை சந்தித்து இருந்தன. பெங்களூரு அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடமும், ராஜஸ்தான் அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடமும் வீழ்ந்திருந்தன.
பெங்களூரு அணி 5 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 2 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி 5 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 3 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் உள்ளது.