"Good Morning-க்கு NO - ஜெய் ஹிந்த்-க்கு YES"!
ஹரியானாவில் உள்ள பள்ளிகளில் ஆக.15 முதல் குட் மார்னிங் சொல்வதற்கு பதில் ஜெய் ஹிந்த் என்று சொல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
1947ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் அடைந்து வரும் ஆகஸ்ட் 15 அன்று 78-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. வழக்கமான ஆண்டுதோறும் நாடு முழுவதும் உற்சாகத்துடன் சுதந்திர தினம் கொண்டாடப்படும். இந்த நிலையில், ஹரியானா பள்ளிகளில் குட் மார்னிங் சொல்வதற்கு பதில் ஜெய் ஹிந்த் என்று சொல்ல வேண்டும் என தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த மாநில பள்ளிக் கல்வித்துறை, அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், "இனி மாணவர்கள் காலையில் ஆசிரியர்களைப் பார்த்ததும் குட் மார்னிங், எனவோ மாலையில் குட் ஈவ்னிங் எனவோ சொல்லக் கூடாது. ஆகஸ்ட் 15 முதல் எப்போதும் ஜெய் ஹிந்த் மட்டுமே சொல்ல வேண்டும்.
மாணவர்களிடையே நாட்டுப் பற்றை வளர்ப்பதற்காக இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாட்டின் ஒற்றுமை மற்றும் மரியாதையை வெளிப்படுத்தும் விதமாக ஒவ்வொரு முறையும் ஜெய் ஹிந்த் சொல்லும்போது மக்களிடையே உத்வேகம் பிறக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.