For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பாகிஸ்தானில் ‘ஜெகநாதர் ரத யாத்திரை’... வைரலாகும் வீடியோ!

12:48 PM Aug 03, 2024 IST | Web Editor
பாகிஸ்தானில் ‘ஜெகநாதர் ரத யாத்திரை’    வைரலாகும் வீடியோ
Advertisement

பாகிஸ்தானில் ‘ஜெகன்நாதர் ரத யாத்திரை’ திருவிழா கொண்டாடப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Advertisement

‘ரத யாத்திரை’ என்பது இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு திருவிழா ஆகும். புரி கடற்கரை நகரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற புரி ஜெகன்நாதர் கோயிலில் இந்த விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. கோயிலின் உற்சவர்களான ஜெகன்நாதர், பலபத்திரர், சுபத்திரை ஆகியோர் ஆண்டுதோறும், தனித்தனியாக மூன்று ரதங்களில் புரி நகரத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.

இந்நிலையில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள பாகிஸ்தான் நாட்டில் ரத யாத்திரை திருவிழா கொண்டாடப்பட்டது. பாகிஸ்தானின் கராச்சி நகரில் கொண்டாடப்பட்ட இந்த திருவிழாவின் வீடியோக்களை விகாஷ் என்ற இன்ஸ்டாகிராமர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோ பக்தர்கள் கூட்டம் கூட்டமாக பஜனை பாடுவதையும், தேரை வடம்பிடித்து இழுப்பதையும் காட்டுகிறது. பக்தர்களுக்கு தண்ணீரும் வழங்குகின்றனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் பல கருத்துகளும் குவிந்து வருகின்றனர். அதில் சிலவற்றை இங்கு காண்போம்.

  • பாகிஸ்தானின் இந்தப் பக்கத்தை காட்டியதற்கு நன்றி.
  • ஒரு இந்திய முஸ்லீமாக, இது என் என் இதயத்தை மகிழ்ச்சியடையச் செய்தது.
  • இது எங்கள் கராச்சியின் மரியாதை.
Tags :
Advertisement