தொகுதி மறுவரையறை தொடர்பான ஜேஏசி கூட்டம் - கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு அழைப்பு!
மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக கடந்த வாரம் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தென்மாநிலங்களின் எம்.பி.க்களை உள்ளடக்கிய கூட்டு நடவடிக்கை குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டு நடவடிக்கை குழு அமைப்பதற்கான ஆலோசனை கூட்டம் வருகிற மார்ச் 22 தேதி நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க கோரி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கான உள்ளிட்ட 7 மாநில அரசியல் தலைவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் எழுதினார். அதன் தொடர்ச்சியாக திமுக-வில் உள்ள முக்கியத் தலைவர்கள் அந்ததந்த மாநில அரசியல் தலைவர்களை சந்தித்து அழைப்பை கொடுத்து வந்தனர்.
அதன்படி கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக், ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் செயல் தலைவர் கே.டி. ராமராவ் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு
கே.டி. ராமராவ்-க்கு திமுக அமைச்சர் பழனிவேல் தியாகராஜனும், தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. ஆகியோர் நேரில் அழைப்பு விடுத்தனர். மேலும் கேரளா மாநில சிபிஐ, சிபிஎம், காங்கிரஸ், ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளின் முக்கிய பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.