Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஜாபர் சாதிக் வழக்கு | இயக்குனர் அமீர் அலுவலகம் உள்ளிட்ட 30 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை!

10:05 AM Apr 09, 2024 IST | Web Editor
Advertisement

போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் இயக்குநர் அமீரின் அலுவலகம் உள்ளிட்ட பல இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

டெல்லியில் கடந்த மாதம் ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.  தொடர்ந்து,  அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்,  இந்த கடத்தலில் திரைப்பட தயாரிப்பாளரும்,  திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் முக்கிய பங்காற்றியது தெரிய வந்தது.

இதையடுத்து,  ஜாபர் சாதிக்கை போதைப் பொருள் தடுப்புத் துறையினர் (என்.சி.பி.) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  தொடர்ந்து,  ஜாபக் சாதிக்கின் கூட்டாளியான திருச்சியை சேர்ந்த சதா கைது செய்யப்பட்டுள்ளார்.  இதனையடுத்து ஜாபர் சாதிக் வழக்கில் இயக்குநர் அமீர் ஆஜராகுமாறு மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பியது.

இதனைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தலைமை அலுவலகத்தில் கடந்த 2 ஆம் தேதி அமீர் ஆஜரானார்.  இந்த நிலையில்,  சென்னை தியாகராய நகரில் உள்ள இயக்குநர் அமீரின் அலுவலகம்,  ஜாபர் சாதிக்கிற்கு தொடர்புடைய இடங்கள் உள்ளிட்ட 30 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனை நடக்கும் இடங்களில் தூப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎஃப் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags :
AmeerArrestCrimedrugDrug SmugglingEDEnforcement Directoratefilm ProducerinvestigationJafer Sadiqsummon
Advertisement
Next Article