Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“புறக்கணிக்கப்படுவது தேர்தல் அல்ல... திமுகதான்” - தமிழிசை சௌந்தரராஜன்!

புறக்கணிக்கப்படுவது தேர்தல் அல்ல, திமுகதான் என ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடாதது குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
08:21 PM Jan 12, 2025 IST | Web Editor
Advertisement

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் கடந்த டிச.14ம் தேதி காலமானார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இத்தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெற உள்ளது.

Advertisement

வேட்புமனு தாக்கல் ஜன.10ஆம் தேதி தொடங்கியது. இதனையடுத்து தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் இடைத்தேர்தலில் போட்டி மற்றும் தங்கள் வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. நாதக தனித்துப் போட்டி என அறிவித்தது. இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் போட்டியில்லை எனவும், திமுக போட்டியிடும் என தெரிவிக்கப்பட்டது. திமுக சார்பில் வி.சி.சந்திரசேகர் போட்டியிடுகிறார்.

தொடர்ந்து எதிர்க்கட்சியான அதிமுக வேட்பாளரை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போட்டியிடவில்லை என அறிவித்தது. அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவும் போட்டியில்லை என அறிவித்தது. அதிமுக போட்டியிடவில்லை என்ற செய்தி வெளியானதும், பாஜக போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாஜகவும் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளது.

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு மட்டுமே இருப்பதால் ஆளுங்கட்சியான திமுகவை தவிர அனைத்து கட்சிகளும் போட்டியில்லை என அறிவித்துள்ளன. இந்நிலையில் பாஜகவும் இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது என்பது செய்தி... புறக்கணிக்கப்படுவது தேர்தல் அல்ல... உண்மையில் புறக்கணிக்கப்படுவது திமுக தான்” என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழிசை சௌந்தரராஜன் தனது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது;

“பாஜகவும்... ஈரோடு இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது... அனைத்து முக்கிய கட்சிகளும்.. இந்த இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது என்பது செய்தி... புறக்கணிக்கப்படுவது தேர்தல் அல்ல... உண்மையில் புறக்கணிக்கப்படுவது திமுக தான்... யாரும் நம்பிக்கையோடு போட்டி போடக்கூட தகுதியற்றது திமுக  என்பதை அனைத்துக் கட்சிகளின் முடிவும் காண்பிக்கிறது. திமுகவின் அராஜக அரசியலால் நேர்மையாக தேர்தல் நடக்கும் என்ற நம்பிக்கை இன்மையால் தேர்தல் புறக்கணிப்பு முடிவை எடுக்கும் கட்டாயத்தை ஏற்படுத்தும் திமுகவை 2026- இல் மக்கள் புறக்கணிப்பார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
BJPby electionDMKErodetamilisai soundararajan
Advertisement
Next Article