"மழை வர போகுதே"... காலை 10 மணி வரை இங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஏப்.10ம் தேதி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள் : கால்பந்து விளையாடிவிட்டு ஓய்வெடுத்த நபருக்கு நேர்ந்த சோகம்… சென்னையில் அதிர்ச்சி!
இதற்கிடையே, தெற்கு அந்தமான் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்று சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது. இது மெதுவாக நகர்ந்து தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் (அதாவது நாளை இரவுக்குள்) குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால், தமிழ்நாட்டில் கனமழை கொட்ட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.