For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தமிழ்நாட்டில் #ITI மாணவர் சேர்க்கை தேதி நீட்டிப்பு!

02:13 PM Sep 13, 2024 IST | Web Editor
தமிழ்நாட்டில்  iti மாணவர் சேர்க்கை தேதி நீட்டிப்பு
Advertisement

தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு (Commissioner of Employment and Training) மற்றும்‌ பயிற்சித்துறையின்‌ கீழ்‌ 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள்‌ மற்றும்‌ 311 தனியார்‌ (Government & Private ITI) தொழிற்பயிற்சி நிலையங்கள்‌ இயங்கி வருகின்றன. இவற்றில்‌ 2024-2025-ம்‌ கல்வியாண்டிற்கான மாணவர்கள்‌ சேர்க்கை செய்வதற்கான கால அளவு மாணவர்களின்‌ நலன்‌ கருதி 31.08.2024 வரை ஏற்கனவே வழங்கப்பட்டது. தற்பொழுது மாணவர்களின்‌ நலன்‌ கருதி 30.09.2024 வரை நீட்டிக்கப்படுகிறது.

இந்த அரிய வாய்ப்பை நன்கு பயன்படுத்தி மாணவர்கள்‌ தாம்‌ விரும்பும்‌ தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு கல்விச்‌ சான்றிதழ்களுடன்‌ நேரில்‌ சென்று தாம்‌ விரும்பும்‌ தொழிற்பிரிவை தேர்வு செய்து தொழிற்பயிற்சி நிலையங்களில்‌ சேரலாம். அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில்‌ சேரும்‌ மாணவர்களுக்கு பயிற்சிக்‌கட்டணம்‌ இல்லை.

கல்வி உதவித்தொகையாக மாதம்‌ ரூ.750/- வழங்கப்படும்‌. தமிழக அரசு வழங்கும்‌ விலையில்லா மிதிவண்டி, விலையில்லா சீருடை, விலையில்லா மூடூ காலணிகள்‌ (Shoe), விலையில்லா பயிற்சிக்கான கருவிகள்‌, கட்டணமில்லா பேருந்து வசதி இவை அனைத்தும்‌ வழங்கப்படும்‌.

இது தொடர்பாக ஏதேனும்‌ ஐயம்‌ ஏற்படும்‌ நிலையில், 9499055689 அலைபேசி எண்ணிலும்‌ தொடர்பு கொள்ளலாம்‌. என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement