For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#PMModi-க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி!

09:32 PM Sep 17, 2024 IST | Web Editor
 pmmodi க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி
Advertisement

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisement

நாட்டின் பிரதமராக தொடர்ந்து 3வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடி இன்று 74வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிரதமரின் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் கட்சித்தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள், ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் விழா பாஜக சார்பில் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்டது.

இந்த நிலையில், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி தனது எக்ஸ் தள பக்கத்தில் பிரதமர் மோடியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில், "இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். உலக சவால்களை இணைந்து எதிர்கொள்ள, நம் நட்புறவையும், இத்தாலி - இந்தியா இடையேயான கூட்டாண்மையையும், தொடர்ந்து வலுப்படுத்துவோம்"

இவ்வாறு இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி பதிவிட்டுள்ளார்.

Tags :
Advertisement