அடுத்த 3 மணி நேரத்தில் கொட்ட போகும் மழை.! எந்த மாவட்டங்களில் தெரியுமா?
அடுத்த 3 மணி நேரத்திற்கு நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேகமாறுபாடு காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் தென்காசி, நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும், இதர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல், நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று (ஜூலை 31) கனமழை முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, தென்காசி, நெல்லை, திண்டுக்கல் மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் குமரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) July 31, 2024
இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.