For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"இது கடினமான முடிவு..." - விவகாரத்து பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஹர்திக் பாண்டியா!

06:37 AM Jul 19, 2024 IST | Web Editor
 இது கடினமான முடிவு       விவகாரத்து பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஹர்திக் பாண்டியா
Advertisement

ஹர்திக் பாண்டியா - நடாஷா தம்பதியினர் விவகாரத்து செய்துள்ளதாக வதந்திகள் பரவி வந்த நிலையில் அதற்கு ஹர்திக் பாண்டியா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Advertisement

இந்தியில் ஒளிபரப்பாகும் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் போட்டியாளரும் நடன கலைஞரான நடாஷாவுக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ஹர்திக் பாண்டியாவுக்கும் கடந்த  2020-ம் ஆண்டு மே 31-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு அகஸ்தியா எனும் பெயரில் குழந்தையும் உள்ளது.

கடந்த மே மாதம் முதல் இணையத்தில் ஹர்திக் பாண்டியா - நடாஷா தம்பதிகளுக்கு இடையே விவாகரத்து நடைபெற்றுள்ளதாக வதந்திகள் பரவி வந்தது. இந்த நிலையில் தற்போது அதற்கு முற்றிப்புள்ளி வைக்கும் விதாமக தாங்கள் பிரிவதாக இருவரும் அதிகாரபூர்வமாக அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பாக ஹர்திக் பாண்டியா தனது அறிவித்துள்ளதாவது..

“நாங்கள் இருவரும் 4 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த நிலையில், தற்போது நானும், நடாஷாவும் பரஸ்பரம் பிரிவது என  முடிவு செய்துள்ளோம். எங்கள் இருவரது வாழ்க்கைக்கும் இது தான் நல்லது என நம்புகிறோம். பரஸ்பர மரியாதை, தோழமையுடன் மகிழ்ச்சியை அனுபவித்த நாங்கள் எடுத்த கடினமான முடிவு இது.

எங்களது மகனான அகஸ்தியா, எங்கள் இருவரின் வாழ்க்கையிலும் தொடர்ந்து இருப்பார். அவருக்கான மகிழ்ச்சிக்காக பெற்றோர்களான எங்களால் முடிந்த அனைத்தையும் அவருக்கு வழங்குவதை உறுதி செய்வோம். இந்த கடினமான நேரத்தில் உங்கள் ஆதரவையும் கேட்டுக்கொள்கிறோம்” என பதிவிட்டுள்ளார்.

பார்படாஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.  இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றதால் நாடே கொண்டாட்டத்தில் ஆழ்ந்தது.  இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற ஹர்திக் பாண்டியா முக்கிய பங்காற்றினார்.

இதனைத் தொடர்ந்து தனது சொந்த ஊரான குஜராத் திரும்பிய அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். உலகக் கோப்பை வெற்றி மற்றும் கொண்டாட்டங்களுக்கு பிறகு நீண்ட நாட்களாக பரவி வந்த பிரிவு குறித்து வதந்திக்கு ஹர்திக் பாண்டியா தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Tags :
Advertisement