Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கோவையில் கட்டுமான நிறுவனங்களில் ஐடி ரெய்டு - 3வது நாளாக தொடரும் சோதனை..!

09:46 AM Jan 04, 2024 IST | Jeni
Advertisement

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு தொடர்புடைய இடங்களில் 3வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

Advertisement

ஜனவரி 02-ம் தேதி சென்னை அமைந்தகரை செல்லம்மாள் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதே போல் CMK Projects Pvt Ltd நிறுவனத்திலும், அந்நிறுவனத்திற்கு தொடர்புடைய இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.

இந்த நிறுவனம் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை ஒப்பந்தம் எடுத்து கட்டி கொடுத்துள்ளது. ஈரோட்டை தலைமையிடமாக கொண்டு இந்த நிறுவனம் செயல்படுகிறது. சென்னை அண்ணாநகர் ஏகே பிளாக் 10வது மெயின் ரோட்டில் உள்ள அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.

கோவையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்றது. கோவை எலன் இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளர் விக்னேஷ் என்பவரது இல்லத்திலும், கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள கிரீன் பீல்டு ஹவுசிங் பிரைவேட் லிமிடெட் அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது. கருமத்தம்பட்டி மற்றும் கோவில்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும், இதேபோல் 100-க்கும் மேற்பட்ட  இடங்களில் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டது.

இதையும் படியுங்கள் : 33வது சியோல் மியூசிக் அவார்ட்ஸ் - BTS, BLACKPINK-க்கு விருது...!

இரண்டாவது நாளாக நேற்றும் கட்டுமான நிறுவனங்களில் வருமானவரித்துறை சோதனை தொடர்ந்தது. சென்னையில் அண்ணாநகர், ஷெனாய் நகர், எழும்பூர் பகுதியில் உள்ள கட்டுமான நிறுவனங்களின் அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்றது.

இந்நிலையில், கோவையில் மூன்றாவது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கட்டுமான தொழில் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் தொடர்ந்து ஐடி சோதனை நடைபெற்று வருகிறது.

Tags :
#IncomeTaxCoimbatoreconstructionITITRaid
Advertisement
Next Article