For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"சங்க நிர்வாகியாக ஒருவரை தேர்ந்தெடுக்கவில்லை என்ற காரணத்திற்காக என்னை தாலிபான்களுடன் தொடர்புபடுத்துகின்றனர்" - இயக்குநர் அமீர் வேதனை!

07:44 AM Jul 01, 2024 IST | Web Editor
 சங்க நிர்வாகியாக ஒருவரை தேர்ந்தெடுக்கவில்லை என்ற காரணத்திற்காக என்னை தாலிபான்களுடன் தொடர்புபடுத்துகின்றனர்    இயக்குநர் அமீர் வேதனை
Advertisement

சங்க நிர்வாகியாக ஒருவரை தேர்ந்தெடுக்கவில்லை என்ற காரணத்திற்காக என்னை தாலிபான்களுடன் தொடர்புடையன் என கூறுகின்றனர் என இயக்குநர் அமீர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Advertisement

திரைப்பட படத் தொகுப்பாளர்கள் சங்க தேர்தலில், வெற்றி பெற்றவர்களுக்கு சென்னை, சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் திரையரங்கில் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் இயக்குனர்கள் வெற்றிமாறன், அமீர், உதயகுமார், நடிகர்கள் இளவரசு, சிங்கம் புலி மற்றும் நடிகைகள் தேவயானி, இனியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  அப்போது மேடையில் பேசிய இயக்குநர் அமீர் கூறியதாவது..,

"ஒரு இயக்குனருக்கு படத்தொகுப்பு மட்டுமல்ல இசை, சண்டை, எல்லாம் தெரிந்திருக்க வேண்டும். படம் தேறுமா, தேராதா என்று கண்டுபிடிப்பது படத்தொகுப்பாளர் தான்.  படத்தொகுப்பாளர்கள் படத்திற்கு உண்மையாக இருக்க வேண்டும். படம் தேறுமா, தேராதா என்பது முக்கியமல்ல. படத்தொகுப்பாளர்கள் அந்தப் படத்தை தேற்ற வேண்டும், அந்தப் பொறுப்பு அவர்களுக்கு உள்ளது.

சங்கங்களில் உள்ள பிரச்னையே முதலில் இந்த நிர்வாகம் சரியில்லை என்று கூறுவார்கள்.  சில வருடங்களுக்கு முன்பு ஒருவரை சங்க நிர்வாகியாக தேர்ந்தெடுக்கவில்லை என்ற காரணத்திற்காக, என்னை தாலிபான்களுடன் தொடர்புடையவன் என்று கூறினர்.

ஒவ்வொரு முறையும் பொதுக்குழு நடக்கும்போது கத்தி மேல் நிற்பது போன்றுதான்
இருக்கும். அதை சமாளிக்க ஒரு திறமை வேண்டும். எல்லோராலும் அதை சமாளிக்க
முடியாது.  தமிழ் சினிமா தற்போது அனாதையாக உள்ளது. இந்த நிலையில் சங்கத்தை காப்பாற்றுவதாக பேசுகிறார்கள்.


வருடத்திற்கு 250 படங்கள் உருவாகிறது. ரசிகர்கள் எவ்வளவு படங்களை
பார்ப்பார்கள்.  இரண்டு வருடங்கள் பார்ப்பேன் இந்த நிலை சரியாகவில்லை என்றால், மதுரைக்குச் சென்று படமெடுத்துக் கொண்டு அங்கேயே இருந்து விடுவேன்.

எவ்வளவு செலவு செய்து படங்கள் எடுத்தாலும் இங்கு தியேட்டர்கள் கிடைப்பதில்லை.  க்யூப் நிறுவனம் தொடங்கும் போது நம்மிடம் வந்து நிற்பார்கள். ஆனால் இப்போது அவர்கள் மோனோபோலி ஆகிவிட்டார்கள். இப்போது அவர்களைக் கேள்வி கேட்க முடிவதில்லை" என்று கூறினார்.

Tags :
Advertisement