For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"செஞ்சிக்கோட்டை மராட்டியர்கள் கட்டியது" என்று அறிவிக்கப்பட்டதை ஏற்க முடியாது - யாதவ மக்கள் இயக்கம்!

செஞ்சிக்கோட்டையானது, மராட்டிய மன்னர்களால் கட்டப்பட்டது என்று அறிவிக்கப்பட்டதை ஏற்க முடியாது என்று யாதவ மக்கள் இயக்கம்
08:34 PM Jul 20, 2025 IST | Web Editor
செஞ்சிக்கோட்டையானது, மராட்டிய மன்னர்களால் கட்டப்பட்டது என்று அறிவிக்கப்பட்டதை ஏற்க முடியாது என்று யாதவ மக்கள் இயக்கம்
 செஞ்சிக்கோட்டை மராட்டியர்கள் கட்டியது  என்று அறிவிக்கப்பட்டதை ஏற்க முடியாது   யாதவ மக்கள் இயக்கம்
Advertisement

யுனஸ்கோ நிறுவனமானது, கடந்த 11-ந் தேதி செஞ்சிக்கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த அறிவிப்பில் செஞ்சிகோட்டையானது மராட்டியர்களால் கட்டப்பட்டது என்று தவறாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் அறிக்கை வெளியிட்டிருந்தனர். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் யாதவ மக்கள் இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் செஞ்சி கோட்டையை ஆட்சி செய்த ஆனந்தக் கோனின் வம்சாவழி மன்னர்களான கிருஷ்ணக் கோன், கோனாரிக் கோன், புலியக் கோன், கோட்டிலிங்க கோன், உள்ளிட்டோருக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது. இக்கூட்டத்தில், யாதவ மக்கள் இயக்கத்தின்  தலைவர் செங்கம் கு.ராஜாராம் கலந்துக்கொண்டு சிறப்புரை ஆற்றினார்.அப்போது பேசிய அவர்

Advertisement

”செஞ்சி கோட்டையை வரலாற்று புராதான சின்னமாக அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாகவும், ஆனால் அதே சமயம் செஞ்சி கோட்டையை சுமார் 300 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்த ஆனந்தக் கோனின் வம்சாவழி மன்னர்கள் ஆட்சி காலத்தில் தான் செஞ்சி கோட்டை கட்டமைக்கப்பட்டது என்ற வரலாற்றை மறைத்து மராட்டிய மன்னர்கள் கட்டிய கோட்டை என்று அறிவிக்கப்பட்டதை ஏற்க முடியாது” என்றும் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து ராஜாராம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது பேசிய அவர்  ”தமிழக முதல்வர் செஞ்சி கோட்டையை தொல்லியல்துறை அழைத்து வந்து நேரில் ஆய்வு செய்து 90 நாட்களுக்கு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி இந்த தவற்றை சரிசெய்ய வேண்டும்” இல்லை என்றால் செஞ்சி கோட்டை முன்பு சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டம் நடத்தபடும்” என்று தெரிவித்தார்.

Tags :
Advertisement