”அது மத்திய அரசின் பொறுப்பு, நாங்கள் விமர்சனத்திற்கு ஆளாகிறோம்” - உச்ச நீதிமன்றம் பரபரப்பு கருத்து!
நாடாளுமன்ற மாநிலங்களவையின் 6வது பயிற்சித் திட்டத்தின் நிறைவு விழாவின்போது துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் “குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா ? குடியரசுத் தலைவரை நீதிமன்றம் வழிநடத்தும் சூழ்நிலையை அனுமதிக்க முடியாது.
ஜனநாயக சக்திகளுக்கு எதிரான அணு ஏவுகனையாக அரசியலமைப்பு சட்டப்பிரிவு 142 மாறியுள்ளது. உச்ச நீதிமன்றம் சூப்பர் நாடாளுமன்றம் போல் செயல்படுகிறது. என தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததை விமர்சிக்கும் வகையில் பேசினார்.
இந்த நிலையில் ஓடிடி தளங்களில் நேரடியாக ஆபாச காட்சிகள் இடம்பெறுவதை தடை செய்ய கோரிய மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர். கவாய் அமர்வில் இன்று (ஏப்ரல் 21) நடைபெற்றது. அப்போது பி.ஆர். கவாய், “தற்போதுள்ள நிலையில், நாங்கள் நாடாளுமன்ற மற்றும் நிர்வாக செயல்பாடுகளில் அத்துமீறுவதாக சொல்கிறார்கள். அதை (ஓடிடி தளங்களை) யார் கட்டுப்படுத்த முடியும்?
அது தொடர்பான ஒழுங்குமுறையை ஏற்படுத்துவது மத்திய அரசின் பொறுப்பு. நிர்வாக செயல்பாடுகளிலும், சட்டமன்ற செயல்பாடுகளிலும் நாங்கள் தலையிடுகிறோம் என்று விமர்சனத்திற்கு ஆளாகிறோம்” என பரபரப்பான கருத்தை தெரிவித்துள்ளார்.