திருமங்கலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரை மாய்த்துக் கொண்ட பரிதாபம்!
சென்னை திருமங்கலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
10:18 AM Mar 13, 2025 IST | Web Editor
Advertisement
சென்னை திருமங்கலத்தை சேர்ந்தவர் மருத்துவர் பாலமுருகன். இவரது மனைவி உயர் நீதிமன்ற வழக்குரைஞரான பணியாற்றி வந்தார். இந்நிலையில் மருத்துவர் பாலமுருகன், அவரது மனைவி சுமதி தங்கள் மகன்கள் இரண்டு பேருடன் சேர்ந்து தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டனர்.
Advertisement
இதுதொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து நான்கு பேரின் சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் கடன் தொல்லையால் நான்கு பேரும் உயிரை மாய்த்துக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இருப்பினும் தற்கொலைக்கு காரணம் கடன் தொல்லைதானா? அல்லது குடும்பத்தில் ஏதேனும் பிரச்சனைகளா? என பலவிதமான கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.