For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"அவையில் பேச எம்பிக்கள், எம்எல்ஏக்கள் லஞ்சம் வாங்குவது குற்றமே" - உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு!

12:49 PM Mar 04, 2024 IST | Web Editor
 அவையில் பேச எம்பிக்கள்  எம்எல்ஏக்கள் லஞ்சம் வாங்குவது குற்றமே    உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு
Advertisement

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில்  பேச எம்பிக்கள், எம்எல்ஏக்கள் லஞ்சம் வாங்குவது குற்றமே என உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

Advertisement

வாக்களிப்பதற்கு லஞ்சம் பெறுதல்,  சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் பேசுவதற்காக லஞ்சம் பெறுதல் தொடர்பான வழக்கு விசாரணையில் இருந்து எம்.எல்.ஏ.. எம்.பி.க்களுக்கு விலக்கு கிடையாது என உச்சநீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ்,  சஞ்சய் குமார்,  பி.எஸ்.நரசிம்ஹா, ஜெ.பி.பார்திவாலா,  மனோஜ் மிஸ்ரா ஆகிய 7 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதையும் படியுங்கள் :“40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டில் வேலையில்லா திண்டாட்டம்” -ராகுல் காந்தி விமர்சனம்!

அரசியல் சாசன பிரிவு 105ன் உட்பிரிவு 2 , 194 (2) ஆகிய இரண்டு சட்டப்பிரிவுகளும் நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றங்களில் வாக்கெடுப்பின் போது ஒரு தனிப்பட்ட உறுப்பினரின் நடவடிக்கை தொடர்பாக நீதிமன்றத்தின் எந்த ஒரு விசாரணைக்கும் ஆஜராகாமல் இருப்பதற்கான வாய்ப்பினை வழங்குகிறது.  இந்த சட்டப்பிரிவு எந்த அளவிற்கு ஒரு சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற உறுப்பினருக்கு பாதுகாப்பை வழங்க முடியும் என்பது தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து நீதிபதிகள் வழங்கி தீர்ப்பில் கூறியதாவது :

"நாடாளுமன்றம்,  சட்டப்பேரவைகளில் வாக்களிக்க லஞ்சம் வாங்குவது,  பொது வாழ்க்கையில் நேர்மையை சீர்குலைப்பதாகும் .வாக்களிக்க ஒரு சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர் லஞ்சம் பெறுகிறார் என்றால் அந்த இடத்திலேயே அவர்களுக்கான சட்ட பாதுகாப்பு நீங்கி விடுகிறது.  லஞ்சம் வாங்குவது என்பது நாடாளுமன்ற சிறப்பு உரிமைகளால் பாதுகாப்பு பெற்றது அல்ல.  லஞ்சம் வாங்குவது என்பது ஒரு தனிப்பட்ட நபரின் குற்றம் அதற்கும் நாடாளுமன்றத்தில் அவர் பேசுவதற்கும் நடந்து கொள்வதற்கும் தொடர்பு இல்லை.

அரசியலமைப்பின் பிரிவு 105 (2) அல்லது 194 இன் கீழ்,  உறுப்பினர் லஞ்சம் வழங்கிய பின் அவர் மீதான நடவடிக்கைக்கு எதிராக பாதுகாக்க வழி வகை செய்யவில்லை.  லஞ்சம் பொது வாழ்வில் நன்னடத்தையை அழிக்கிறது. லஞ்சம் என்பது ஒரு மிகப்பெரிய குற்றம். ஏற்கனவே, கடந்த 1998 ஆம் ஆண்டு பி.வி நரசிம்மராவ் வழக்கில் அளிக்கப்பட்ட சட்டப்பாதுகாப்பை ரத்து செய்கிறோம்"

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Tags :
Advertisement