ஜெயம் ரவியின் மிருதன் 2 திரைப்படம் - அப்டேட் கொடுத்த படக்குழு!
ஜெயம் ரவியின் 'மிருதன் 2' திரைப்படத்தை இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2016 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் 'மிருதன்' திரைப்படம் வெளியானது. இப்படத்தில் ஜெயம் ரவியுடன் லட்சுமி மேனன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த திரைப்படம் சாம்பி அபோகாலிப்ஸ் கதைக்களத்தில் உருவாகிய முதல் திரைப்படமாகும், ஊரில் ஒரு கொடூர நோய் பரவியதால் ஊரில் உள்ள மக்கள் அனைவரும் சாம்பிகளாக மாற தொடங்குகின்றனர்.
இந்த திரைப்படத்தின் இறுதியில் கதாநாயகனான ஜெயம் ரவியும் அந்த நோயால் பாதிக்கப்பட்டு சாம்பியாக மாறிடுவார். இவ்வாறு திரைப்படத்தின் கதைக்களம் அமைந்து இருக்கும். இந்த திரைப்படத்தின் அடுத்த பாகம் எடுக்கபோவதாக 2016 ஆம் ஆண்டு தெரிவித்தது.
இதையும் படியுங்கள் :“ஐஏஎஸ் பயிற்சி மையங்கள் கொலைக் களங்களாக மாறிவிட்டன!” – உச்சநீதிமன்றம் விமர்சனம்!
இந்நிலையில், 'மிருதன்' திரைப்படத்தின் 2ம் பாகத்திற்கான ப்ரி ப்ரொடக்ஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகின்றனர். படப்பிடிப்பு பணிகள் 2025 ஆம் ஆண்டு தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தில் நடிக்கப் போகும் மற்ற நடிகர்களின் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் எதிர் பார்க்கப்படுகிறது. இயக்குநர் சக்தி சௌந்தரராஜனுடன் நடிகர் ஜெயம் ரவி இணையும் மூன்றாவது திரைப்படமாகும். ஜெயம் ரவி தற்போது பிரதர், காதலிக்க நேரமில்லை, ஜீனி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.