இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்?
இந்திய கிரிக்கெட் அணிக்கு கவுதம் காம்பீர் தலைமை பயிற்சியாளராகவும் அபிஷேக் நாயர் மற்றும் ரியான் டென் உதவி பயிற்சியாளராகவும் உள்ளனர். மேலும் பந்துவீச்சு பயிற்சியாளராக மோர்னே மோர்கலும், பீல்டிங் பயிற்சியாளராக டி திலீப்பும் இந்திய அணியை வழிநடத்தி வருகின்றனர்.
இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரிலும் தோல்வியை சந்தித்தது. அடுத்ததாக இந்திய அணி, இங்கிலாந்து அணியுடன் 5 டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது. இதில் டி20 தொடரை சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது.
இந்த நிலையில் இந்திய அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்தியாவின் சிதான்ஷு கோடக் புதிய பேட்டிங் பயிற்சியாளராக நியமனம் செய்யப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. 52 வயதான சிதான்ஷு கோடக், 2020ல் நடைபெற்ற ரஞ்சி கோப்பை போட்டியில் சவுராஷ்டிரா அணி தலைமை பயிற்சியாளராகவும், 2019ல் இந்தியா ஏ அணியின் பயிற்சியாளராக இருந்துள்ளார்.