ஐ.டி. ஊழியர் கவின் ஆணவக்கொலை - தேமுதிக கண்டனம்!
ஐ.டி. ஊழியர் கவின் ஆணவக்கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு, தேமுதிக தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. பெரியாரும், பாரதியாரும் வாழ்ந்த இந்தத் தமிழ்நாட்டில் சாதி மோதல்கள் காரணமாக இதுபோன்ற வன்முறைகள் தொடர்ந்து நடப்பது மிகவும் வேதனைக்குரியது என்று அக் கட்சி கூறியுள்ளது.
சாதிவெறி காரணமாக கொலை செய்யப்பட்ட கவின் குடும்பத்தினருக்கு அரசியல்வாதிகள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். பலர் இத்தகைய சம்பவத்திற்கு எதிராக போராட்டங்களும் கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இத்தகைய கொலை சம்பவத்தை தேமுதிக வன்மையாகக் கண்டித்துள்ளது. முற்போக்கு சிந்தனைகள் கொண்ட தமிழ்நாட்டில், சாதி மோதல்கள் தொடர்வது சமூகத்தின் பின்னடைவைக் காட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளது.
இத்தகைய கொடூரமான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு உடனடியாகவும், கடுமையாகவும் தண்டனை வழங்க வேண்டும் என்று தேமுதிக வலியுறுத்தியுள்ளது.
மேலும் இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் தடுக்க, காவல்துறை தனிக்கவனம் செலுத்தி, உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்தச் சம்பவம், தமிழ்நாட்டில் சாதி மோதல்களின் தாக்கம் குறித்து மீண்டும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. சமூகத்தில் நல்லிணக்கத்தை நிலைநிறுத்தவும், சாதிவெறியை ஒழிக்கவும் தேவையான சட்ட மற்றும் சமூக நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை தெரிவித்துள்ளன.