Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தோல்வியில் முடிந்த இஸ்ரோவின் PSLV C-61 திட்டம்... இதுதான் காரணமா?

PSLV C-61 திட்டம் தோல்வியடைந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
07:07 AM May 18, 2025 IST | Web Editor
PSLV C-61 திட்டம் தோல்வியடைந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
Advertisement

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து இன்று அதிகாலை 5:59 மணிக்கு விண்ணில் ஏவப்பட்ட PSLV C-61 திட்டம் தோல்வியடைந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

Advertisement

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), இன்று PSLV-C61 மூலம் EOS-09 செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. இது இஸ்ரோவின் 101வது செயற்கைக்கோள் ஏவுதல் ஆகும். 4 கட்டங்களாக ராக்கெட் செலுத்தப்படும் நிலையில், 3ஆவது அடுக்கு பிரிந்தபோது பிஎஸெல்வி சி61 ராக்கெட் திட்டம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

232 வது கிலோமீட்டர் தொலைவில் ராக்கெட் சென்று கொண்டிருக்கும் போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் சரியான பாதையில் பயணிக்க முடியவில்லை என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ஆய்வுக்கு பின்னர் விரிவான அறிக்கை கொடுக்கப்படும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். சரியாக 8 நிமிடம் 13 விநாடிகளில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
EOS-09 missionISROSatelliteV Narayanan
Advertisement
Next Article