For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சந்திரயான் 3 விண்கலம் தரை இறங்கிய இடத்திற்கு 'சிவசக்தி' என பெயர்: சர்வதேச விண்வெளி யூனியன் ஒப்புதல்!

11:09 AM Mar 25, 2024 IST | Web Editor
சந்திரயான் 3 விண்கலம் தரை இறங்கிய இடத்திற்கு  சிவசக்தி  என பெயர்   சர்வதேச விண்வெளி யூனியன் ஒப்புதல்
Advertisement

நிலவின் தென்துருவத்தில் சந்திரயான்-3 விண்கலம் தரை இறங்கிய இடத்துக்கு  பிரதமர் 'சிவசக்தி' என பெயரிட்டதை சர்வதேச விண்வெளி யூனியன் ஒப்புதல் அளித்துள்ளது.

Advertisement

புதிதாக கண்டுபிடிக்கப்படும் கோள்கள் அல்லது இடங்களுக்கு வைக்கப்படும் பெயர்களுக்கு சர்வதேச விண்வெளி யூனியன் (ஐஏயு) ஒப்புதல் அளிக்கும்.  அதன்பின்னரே கோள்களுக்கான பெயர்கள் அறிவிக்கப்பட்டும்.  நிலவின் தென் துருவத்துக்கு முதன் முதலாக இந்தியா அனுப்பிய சந்திரயான் - 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கடந்தாண்டு ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெற்றிகரமாக தரையிறங்கியது.  இந்த இடத்துக்கு 'சிவசக்தி' என பிரதமர் மோடி பெயர் வைத்தார்.

இதையும் படியுங்கள் : “மதுரை எம்.பி சு.வெங்கடேசன் செய்த சாதனைகளைப் பட்டியலிடும் ‘மக்கள் ஊழியன்’ ஆவணப்படத்தை வெளியிட்ட மநீம தலைவர் கமல்ஹாசன்!

இந்தப் பெயருக்கு சர்வதேச விண்வெளி யூனியன் கடந்த 19 ஆம் தேதி ஒப்புதல் அளித்துள்ளது.  இது குறித்து கோள்களின் பெயர்களுக்கான அறிவிப்பு இதழ் விடுத்துள்ள செய்தியில்,  "சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்துக்கு இந்திய புராணங்களில் இடம் பெற்றுள்ள 'சிவசக்தி' என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திரயான் -3 தரையிறங்கிய இடத்துக்கு சிவசக்தி என பெயர் வைத்தபோதே, சந்திரயான்-2 விண்கலம் நிலவில் விழுந்த இடத்துக்கு  'திரங்கா' (மூவர்ணம்) என பிரதமர் மோடி பெயர் வைத்தார்.  இதேபோல் கடந்த 2008 ஆம்ஆண்டு சந்திரயான்-1 விண்கலம்தரையிறங்கிய இடத்துக்கு 'ஜவஹர் பாய்ன்ட்' என அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement