For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"பிரபஞ்சத்தில் #aliens இருப்பது உண்மைதான்!" - இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்!

04:56 PM Aug 25, 2024 IST | Web Editor
 பிரபஞ்சத்தில்  aliens இருப்பது உண்மைதான்     இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்
Advertisement

 பிரபஞ்சத்தில் ஏலியன்கள் இருப்பது உண்மைதான் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார்.

Advertisement

வேற்று கிரகவாசிகள் பூமிக்கு வருவதாகவும் மனிதர்களுடன் மோதலில் ஈடுபடுவதாகவும் பல திரைப்படங்களில் காட்சிப்படுத்திருப்பார்கள். வேற்று கிரகவாசிகள் குறித்து வியக்கும் படியாக பல தகவல்கள் வெளி வந்து கொண்டிருக்கிறது. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவும் வேற்று கிரகவாசிகள் வெறும் கட்டுக்கதையா? இல்லை உண்மையிலேயே இருக்கிறார்களா? என்று கண்டறிய  ஆய்வை நடத்திகொண்டு இருக்கிறது.

இந்நிலையில், இஸ்ரோ தலைவர் சோம்நாத் பிரபஞ்சத்தில் ஏலியன்கள் இருப்பது உண்மைதான் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் சமீபத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அப்போது பேசிய அவர் கூறியதாவது ;

"பிரபஞ்சத்தில் ஏலியன்கள் நிச்சயமாக உள்ளன. அவைகள் நமது பூமிக்கு நிச்சயம் வந்து சென்றிருக்க வாய்ப்புகள் அதிகம். 100 ஆண்டுகளுக்கு முன் நமது நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. ஆனால், இன்று அந்த நிலை அடியோடு மாறியிருக்கிறது. இத்தகைய மைக்ரோபோன், கேமரா, லைட் மற்றும் தகவல் பரிமாற்ற வசதிகள். தொலைகாட்சி என எதுவும் இல்லாமல் இருந்தது. இவை அனைத்தையும் நாம் 100 ஆண்டுகளில் அடைந்திருக்கிறோம்.

இதையும் படியுங்கள் :#PadaiThalaivan திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளியீடு! படக்குழு அறிவிப்பு!

அந்த வகையில் இதே போன்ற நாகரீகம் இருக்கிறது என நினைத்துக் கொள்ளுங்கள். அவைகள் நம்மை விட 1000 ஆண்டுகள் முன்னேறி இருக்கின்றார்கள் எனில் அவர்கள் எந்த அளவுக்கு வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வெறும் 100 ஆண்டுகளில் நாம் இந்த அளவுக்கு வளர்ச்சி பெற முடியும் என்றால், அடுத்த 100 ஆண்டுகளில் நம் வளர்ச்சி எப்படி இருக்கும் என்று யோசித்து பாருங்கள். நம்மை விட 1000 ஆண்டுகள் முன்தோன்றி இருக்கும் வேற்றுகிரக வாசிகள் எத்தகைய வளர்ச்சி பெற்றிருப்பார்கள் என்று யோசித்து பாருங்கள். அவர்கள் நிச்சயம் இங்கு இருக்க வேண்டும். நம்மை விட 10000 மடங்கு வளர்ச்சி பெற்ற தொழில்நுட்பம் கொண்டவர்கள் எப்படி இருப்பார்கள் என்று நினைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் நிச்சயம் இருப்பதற்கு வாய்ப்பு உண்டு" இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :
Advertisement