காசா மீது #Isreal வான்வழி தாக்குதல் - 50 பேர் உயிரிழப்பு!
காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 50 பேர் உயிரிழந்தனர்.
இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே காசாவில் ஏறக்குறைய ஒருவருடத்திற்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக் கட்டப் போவதாக சூளுரைத்த இஸ்ரேல், காசா பகுதியை முற்றுகையிட்டு அங்கு வான்வழியாகவும், தரைவழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது.
போர் தொடங்கியதில் இருந்து காசாவில் இதுவரை 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 1 லட்சத்துக்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் பாலஸ்தீன சுகாதார அமைச்சம் சமீபத்தில் தெரிவித்தது. இடிபாடுகள் அல்லது மருத்துவர்கள் செல்ல முடியாத பகுதிகளில் ஆயிரக்கணக்கான உடல்கள் புதைந்திருப்பதால் உண்மையான பலி இன்றும் அதிகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், காசா முனையின் முவாசி பகுதியில் இஸ்ரேல் நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 50 பேர் உயிரிழந்தனர். இந்த சூழ்நிலையில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கத்தார் நாட்டில் விரைவில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தைக்காக இஸ்ரேலின் உளவுப்பிரிவான மொசாட்டை சேர்ந்த அதிகாரிகள் கத்தாருக்கு செல்ல பிரதமர் நெதன்யாகு அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.