Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

காஸா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் - இதுவரை 50,912 பேர் உயிரிழப்பு!

காஸாவில் இஸ்ரேல் படையினர் நடத்தும் தொடர் தாக்குதலில் இதுவரை 50 ஆயிரத்து 912 பேர் உயிரிழந்துள்ளனர்.
09:18 AM Apr 12, 2025 IST | Web Editor
Advertisement

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபரில் போர் தொடங்கியது. இந்த போரில் இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதலால் இதுவரை 50 ஆயிரத்து 912 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து அப்பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியதாவது,

Advertisement

"காஸாவில் இஸ்ரேல் படையினர் கடந்த 24 மணி நேரமாக நடத்திய தாக்குதலில் மட்டும் 15 பேர் உயிரிழந்தனர். இத்துடன், அங்கு இஸ்ரேல் ராணுவம் சுமார் ஒன்றரை ஆண்டுகளாக நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 50 ஆயிரத்து 912 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 1 லட்சத்து 15 ஆயிரத்து 891 பேர் காயமடைந்துள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்கா, எகிப்து, கத்தார் நாடுகள் மேற்கொண்டுவந்த முயற்சியின் பலனாக, இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே கடந்த ஜன.19 முதல் ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டாலும், அது நீட்டிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
attackscontinuedGazaIsrael
Advertisement
Next Article