Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

காஸாவில் மருத்துவமனை, தங்குமிடங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்! பொதுமக்கள் ஏராளமானோர் பலி!!

10:13 PM Nov 04, 2023 IST | Web Editor
Advertisement

காஸாவில் போர் தீவிரமடைந்த நிலையில் ஜநாவால் நடத்தப்படும் தங்குமிடம் மற்றும் மருத்துவமனையில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

Advertisement

காஸாவின் ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் கடந்த அக். 7 ஆம் தேதி தொடங்கிய போர் இன்று 29 ஆவது நாளாக நீடித்து வருகிறது. வான்வழித் தாக்குதலை மேற்கொண்டு வந்த இஸ்ரேல் ராணுவம் காஸாவிற்குள் நுழைந்து தரைவழித் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் ஜநாவால் நடத்தப்படும் தங்குமிடம் மற்றும் மருத்துவமனையில் இஸ்ரேல் ராணுவம் இன்று நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

காஸா நகருக்கு வடக்கே ஐநாவால் நடத்தப்படும் தங்குமிடத்தை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் இன்று வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 20 பேர் பலியாகி உள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 50 பேர் காயமடைந்தனர். மேலும் காஸா நகரில் உள்ள நாசர் மருத்துவமனையின் வாயிலில் இன்று நிகழ்த்தப்பட்ட மற்றுமொரு தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாக சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மேதத் அப்பாஸ் தெரிவித்தார்.

இஸ்ரேல் வந்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கள் காஸாவில் தற்காலிகப் போா் நிறுத்தம் மேற்கொள்வது குறித்து இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் வெள்ளிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா். அந்தப் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு செய்தியாளா்களிடம் பேசிய நெதன்யாகு, ஹமாஸ் அமைப்பினரால் கடத்திச் செல்லப்பட்ட பிணைக் கைதிகள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்பதற்கான ராணுவ நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன. இலக்கை அடையும் வரை அந்த நடவடிக்கைகள் தொடரும். இடையில் தற்காலிக போா் நிறுத்தம் மேற்கொள்வதற்கான பரிந்துரைகள் திட்டவட்டமாக நிராகரிக்கப்படுகின்றன என்றாா். வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் இஸ்ரேல் பிரதமரை நேற்று சந்தித்து தற்காலிக போர் நிறுத்தம் குறித்து வலியுறுத்திய மறுநாளே இந்த இரண்டு தாக்குதல்களை இஸ்ரேல் ராணுவம் அரங்கேற்றியுள்ளது.

Tags :
childrenGazaHealth DisasterIsraelnews7 tamilNews7 Tamil UpdatesPalestineStop Killing ChildrenUNO Chiefwar
Advertisement
Next Article