ஏமன் தலைநகர் சனா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்
கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையேயான போர் ஒன்றரை ஆண்டுகளைக் கடந்து நடந்து வருகிறது. காசாவில் மக்கள் உணவு, மருத்துவ வசதி இன்றி தவித்து வரும் நிலையில் இஸ்ரேல் தொடர்ந்து காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனால், காசா முனையில் 62 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வருகிறது. சர்வதேச நாடுகள் இஸ்ரேலை கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான இந்த போரில் ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.
மேலும் அவ்வப்போது, இஸ்ரேல் மீதும் பல்வேறு தாக்குதல் நடத்தி வருகின்றனர். இஸ்ரேல் தரப்பும் இந்த தாக்குதலுக்கு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில், இன்று மதியம் ஏமன் தலைநகர் சனாவில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் மின் உற்பத்தி நிலையங்கள், கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் மீது இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தாக்குதலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் எதுவும் இன்னும் வெளியாக இல்லை.