இஸ்ரேல் - ஹமாஸ் இடையே அமைதி திட்டம் - பிரதமர் நரேந்திர மோடி வரவேற்பு!
இஸ்ரேல், ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் தொடர்பான அமைதித் திட்டத்தின் முதல் கட்ட ஒப்பந்தத்தில் இஸ்ரேலும், ஹமாஸும் கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "இஸ்ரேலும், ஹமாஸும் போர் நிறுத்த அமைதித் திட்டத்தின் முதல் கட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. எங்களுடன் இணைந்து பணியாற்றிய கத்தார், எகிப்து மற்றும் துருக்கி நாடுகளின் மத்தியஸ்தர்களுக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "டிரம்பின் இஸ்ரேல்–ஹமாஸ் போர் நிறுத்த அமைதித் திட்டத்தின் முதல் கட்ட ஒப்பந்தத்தை நாங்கள் வரவேற்கிறோம். இது பிரதமர் நெதன்யாகுவின் சிறப்பான தலைமையை எடுத்துரைக்கிறது. பிணைக்கைதிகள் விடுதலை செய்யும் வழியை உருவாக்கும். காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்கவும், அவர்களுக்கு நிம்மதியைத் தரும். காசாவில் நிலையான அமைதிக்கு வழிவகுக்கும்,” என்றும் நாங்கள் நம்புகிறோம்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.