For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

காசாவின் வரலாற்று கட்டடங்களை சிதைக்கும் இஸ்ரேல் - யுனெஸ்கோவிடம் ஹமாஸ் வேண்டுகோள்!

05:41 PM Dec 09, 2023 IST | Web Editor
காசாவின் வரலாற்று கட்டடங்களை சிதைக்கும் இஸ்ரேல்   யுனெஸ்கோவிடம் ஹமாஸ் வேண்டுகோள்
Advertisement

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நடந்துவரும் போரில் அழிக்கப்பட்டு வரும் காஸாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடங்களை பாதுகாக்குமாறு யுனெஸ்கோ அமைப்பிற்கு ஹமாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Advertisement

காஸா நகரத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டுமானங்களை இஸ்ரேல் சிதைத்து வருவதாக ஹமாஸ் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. காஸாவின் மிகப்பெரிய ஓமரி மசூதி சிதைக்கப்பட்டிருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டுள்ளன. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து புனிதத்தளமாக இருந்து வந்த கோயில் இப்போது இஸ்ரேல் இராணுவத்தினரால் அழிக்கப்பட்டுள்ளது.

போர் துவங்கியதிலிருந்து இதுவரை 104 மசூதிகளும் மூன்றுக்கும் அதிகமான தேவாலயங்களும் இஸ்ரேல் தாக்குதலால் அழிக்கப்பட்டுள்ள நிலையில் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் நிலை நிறுத்தும் பழமை வாய்ந்த கட்டடங்களைக் காக்க வேண்டும் என ஹமாஸின் தொல்பொருள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காஸாவின் கட்டடக்கலை பாரம்பரியம் இந்த போரில் அழிக்கப்படக் கூடாது எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. மருத்துவமனைகள், மசூதிகள், பள்ளிகள், தேவாலயங்கள் போன்ற இடங்களில் கூட தாக்குதல் நடத்தி பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொல்லும் இஸ்ரேல், அந்த இடங்களில் ஹமாஸ் படையினர் ஒளிந்திருப்பதாக காரணம் கூறி வருகிறது. இதுவரை 16,000-த்திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதில் 70 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது கவலையளிக்கும் விஷயமாக உள்ளது.

Tags :
Advertisement