காசாவில் பள்ளிக்கூடம் மீது இஸ்ரேல் தாக்குதல் - குழந்தைகள் உட்பட 27 பேர் உயிரிழப்பு!
காசாவுக்கு எதிரான முதற்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது. இதனை தொடர்ந்து காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இதனிடையே கடந்த 18 ம் தேதி காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் காசாவில் உள்ள பள்ளிக்கூடத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 27 பேர் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 14பேர் குழந்தைகள் என்றும் 5 பேர் பெண்கள் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் 70க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ள நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுவதாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதை தவிர காசாவின் பிற பகுதிகளிலும் நேற்று இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியதில், சுமார் 100 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.