For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இஸ்ரேல் தாக்குதல்: காசாவில் 5 ஊடகவியலாளர்கள் உட்பட 29 பேர் பலி!

06:35 PM Jul 06, 2024 IST | Web Editor
இஸ்ரேல் தாக்குதல்  காசாவில் 5 ஊடகவியலாளர்கள் உட்பட 29 பேர் பலி
Advertisement

இஸ்ரேல் தாக்குதலில், கடந்த 24 மணி நேரத்தில் 29 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 5 பாலஸ்தீன ஊடகவியலாளர்களும் அடங்குவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

எரிபொருள் நெருக்கடி நிலவி வரும்நிலையில், காசா மருத்துவமனைகளில் பல துறைகளில் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக சிக்கன நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஜூன் 27-ம் தேதியன்று வெளியிடப்பட்ட இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கை மற்றும் வெளியேற்ற உத்தரவைத் தொடர்ந்து கிழக்கு காசா நகரத்திலிருந்து சுமார் 80,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்புக்கான ஐ.நா அலுவலகம் (OCHA) தெரிவித்துள்ளது.

இந்நிலையில், காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 29 பேர் கொல்லப்பட்டதாக அந்நகரின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொல்லப்பட்டவர்களில் 5 பாலஸ்தீன ஊடகவியலாளர்களும் அடங்குவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கொல்லப்பட்ட 5 ஊடகவியலாளர்களின் பெயர்கள் காசா அரசாங்கத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது, கடந்த 48 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 87 பேர் கொல்லப்பட்டனர் என்று காசா அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 7 முதல் காசா மீதான இஸ்ரேலின் போரில் 38,098 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 87,705 பேர் காயமடைந்துள்ளனர். ஹமாஸ் தலைமையிலான தாக்குதல்களால் இஸ்ரேலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,139 என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், ஆயிரக்கணக்கான மக்கள் காசாவில் இன்னும் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

Tags :
Advertisement