இஷான் கிஷான் அதிரடி சதம் - ராஜஸ்தான் அணிக்கு இமாலய இலக்கு!
18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நேற்று(மார்ச்.22) கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கோலாகலமாக கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. அப்போது கொல்கத்தாவை எதிர்கொண்ட பெங்களூர் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்த நிலையில் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா களமிறங்கினர். பவர் பிளேவில் அதிரடியாக இருவரும் விளையாடி வந்த நிலையில், அபிஷேக் சர்மா 24 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய நிதிஸ் குமார் ரெட்டி 30 ரன்களில் வெளியேறினார். இதற்கிடையில் அதிரடியாக விளையாடிய ஹெட் அரைசதம் கடந்து 67 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து களத்திற்கு வந்த இஷான் கிஷான் சதமடித்தார். கிளாசன் 34 ரன்கள் அடித்து விக்கெட்டை பறிகொடுத்தார். 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்த ஹைதராபாத் அணி 286 ரன்களை குவித்தது. ஹைதராபாத் அணி சார்பில் களமிறங்கிய முதல் ஆறு பேரும் 200க்கு மேல் ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி ராஜஸ்தான் அணிக்கு 287 என்ற இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளனர்.