குடை ரெடியா? காலை 10 மணி வரை இங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாட்டில் இன்று (ஏப்.11) ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. குறிப்பாக கடலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதையும் படியுங்கள் : ஐபிஎல் | தனி ஆளாக ஆட்டத்தை மாற்றிய கே.எல்.ராகுல்… பெங்களூருவை வீழ்த்தியது டெல்லி அணி!
இதற்கிடையே, தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளிலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் நேற்று இரவு மழை கொட்டித் தீர்த்தது. சென்னையில் இன்று அதிகாலை முதல் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது. இதனால், சென்னையில் மழை வெளுத்து வாங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 6 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, திருவள்ளூர், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.