Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஏழுமலை 2-ல் நடிகர் உமாபதி ராமையா?

02:22 PM Aug 19, 2024 IST | Web Editor
Advertisement

ஏழுமலை2 திரைப்படத்தில் நடிகரும், தனது மருமகனுமான உமாபதி ராமையாவை நடிக்க வைக்க நடிகர் ஆர்ஜூன் விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Advertisement

அர்ஜுன் இயக்கத்தில் அவரது இயக்கத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஏழுமலை. இந்த படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக சிம்ரன், மும்தாஜ் ஆகியோர் நடித்திருந்தனர். படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததோடு மட்டுமல்லாமல் பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தன.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை நடிகர் அர்ஜூன் எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த இரண்டாம் பாகத்தில் தனது மருமகனும், நடிகருமான உமாபதி ராமையாவை வைத்து இயக்க இருப்பதாகவும், அர்ஜூனே இந்த படத்தை தயாரிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

முன்னணி நட்சத்திர நடிகரான உமாபதி ராமையா ‘அதாகப்பட்டது மகாஜனங்களே, மணியார் குடும்பம், திருமணம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கும் நடிகர் அர்ஜூனின் மகளும், நடிகையுமான ஐஸ்வர்யாவுக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடந்து முடிந்தது.

Tags :
ArjunEzhumalai 2Umapathy Ramaiah
Advertisement
Next Article