இந்தியா கூட்டணியின் மும்பை பொதுக்கூட்டத்தின் வீடியோவா இது? உண்மை என்ன?
This News Fact Checked by 'Newschecker'
இந்தியா கூட்டணியின் மும்பை பொதுக்கூட்டத்தின் வீடியோவா இது?
Claim: இந்தியா கூட்டணியின் மும்பை பொதுக்கூட்டத்தின் வீடியோ
Fact: வைரலாகும் வீடியோ 2 ஆண்டு பழைய வீடியோவாகும். இவ்வீடியோ 2022-ல் சிவசேனா பொதுக்கூட்டத்தில் எடுக்கப்பட்டதாகும்.
இந்தியா கூட்டணியின் பொதுக்கூட்டம் கடந்த சனியன்று (18/05/2024) மும்பையில் நடந்தது. அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட வீடியோ என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
இந்தியா கூட்டணியின் மும்பை பொதுக்கூட்டத்தின் எடுக்கப்பட்டதாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து அவ்வீடியோவை தனித்தனி கீஃபிரேம்களாக பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அவ்வீடியோ குறித்து தேடினோம்.
இத்தேடலில் @CAshivrajshetty என்கிற பயனர் ஐடியை கொண்ட எக்ஸ் பக்கத்தில் சிவசேனா பொதுக்கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக கூறி இதே வீடியோ மே 15, 2022 அன்று பதிவிடப்பட்டிருப்பதை காண முடிந்தது.
தொடர்ந்து தேடியதில் மேலும் சில எக்ஸ் கணக்குகளில் மே 15, 2022 அன்று இதே வீடியோ பதிவிடப்பட்டிருப்பதை காண முடிந்தது. அப்பதிவுகளை இங்கே, இங்கே, மற்றும் இங்கே காணலாம்.
இதன் அடிப்படையில் பார்க்கையில் வைரலாகும் வீடியோ அண்மையில் நடந்த பொதுக்கூட்டத்தில் எடுக்கப்பட்டதல்ல; அவ்வீடியோ 2 வருடங்களுக்கு முந்திய பழைய வீடியோ என உறுதியாகின்றது.
இதனைத் தொடர்ந்து தேடியதில் மே 14, 2022 அன்று மும்பையில் சிவசேனா கட்சி சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டதாக நியூஸ் 18 லோக்மத் யூடியூப் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டிருப்பதை காண முடிந்தது. அவ்வீடியோவில் காணப்பட்ட பொதுக்கூட்ட பகுதியையும், வைரலாகும் வீடியோவில் காணப்பட்ட பொதுக்கூட்ட பகுதியையும் ஒப்பிட்டு பார்க்கையில் இரண்டும் ஒரே கூட்டத்தில் எடுக்கப்பட்டது என்பதை உணர முடிந்தது.
Conclusion
இந்தியா கூட்டணியின் மும்பை பொதுக்கூட்டத்தின் வீடியோ என்று பரப்பப்படும் வீடியோ இரண்டுகளுக்கு பழைய வீடியோவாகும். அவ்வீடியோவானது 2022 மே மாதத்தில் சிவசேனா கட்சி மும்பையில் நடத்திய பொதுக்கூட்டத்தில் எடுக்கப்பட்டதாகும். இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Partly False
Our Sources
X Post from the user, @CAshivrajshetty, Dated May 15, 2022
Report from News 18 Lokmat, Dated May 14, 2022
Note : This story was originally published by 'Newschecker' and Republished by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.