Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அரசியல் வருகை உண்டா இல்லையா? விஜய் ஆண்டனி புது விளக்கம்!

06:56 PM Apr 13, 2024 IST | Web Editor
Advertisement

அரசியலுக்கு வருவது தொடர்பான யோசனை இல்லை. ஆனால் இல்லை என்பதும் உறுதியாக சொல்வதற்கில்லை என நடிகர் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

Advertisement

மதுரை செல்லூர் பகுதியில் உள்ள கோபுரம் சினிமாஸ் திரையரங்கில்
திரையிடப்பட்டுள்ள இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி நடித்து வெளிவந்துள்ள ரோமியோ திரைப்படத்தை காண நடிகர் விஜய் ஆண்டனி வருகை தந்தார். அப்போது ரசிகர்களோடு பார்த்துவிட்டு கேக் வெட்டி கொண்டாடினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விஜய் ஆண்டனி கூறுகையில் "படத்தின் வெற்றியை மதுரையில் கொண்டாடுவது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. சின்ன வீடு கட்டுவதற்கு இரண்டு வருடங்கள் ஆகிறது நடிகர் சங்கம் கட்டிடம் உலக
தரத்தில் கட்டுவதாக கேள்விப்பட்டேன். பணம் இல்ல போல ரொம்ப கஷ்டப்பட்டு
செய்கிறார்கள் என்று விஜய் ஆண்டனி கூறினார்.

இதனை தொடர்ந்து சமீபத்தில் ஓட்டுக்கு பணம் வாங்குவது தொடர்பாக விஜய் ஆண்டனி கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஓட்டுக்கு பணம் வாங்குவது சரி என்று சொல்லவில்லை. வறுமையில் இருப்பவர்களுக்கு வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும், நல்லவர்களுக்கு ஓட்டு போடுங்கள் என்று தான் சொன்னேன்.

அம்மாவிடம் எப்படி அன்பாக இருக்க வேண்டும் என்று பிச்சைக்காரன் படத்தில் கூறியது போல், மனைவியிடம் எப்படி உண்மையாக இருக்க வேண்டும் என்று எடுத்துரைக்கும்
கருத்து தான் ரோமியோ படம். நான் சாதாரணமாக பேசுவது சர்ச்சையாகப்படுகிறது அந்த சிந்தனைகள் எனக்கு கிடையாது.

அரசியல் சாதாரணமான விஷயம் அல்ல. ரஷ்யா - உக்ரேன் போர் பாருங்கள். நமது நாடு
எப்படி அமைதியாக இருக்கிறது என்பதை FOREIGN போய் பாருங்கள் தெரியும். யார்
ஆட்சிக்கு வந்தாலும் இந்தியாவை அமைதியாக (peaceful) தான் வைத்துக்
கொள்கிறார்கள். சுதந்திரத்திற்கு பின்பு போர் நடந்திருக்கிறதா.? சிலர் தவறு
செய்திருக்கலாம் அதனால் ஆட்சியை தவறு என சொல்ல முடியாது. "ரோமியோ படத்தை
பாருங்கள் கண்டிப்பாக கண்ணீர் வரும்." அரசியல் வருவது தொடர்பான யோசனை இல்லை. ஆனால் இல்லை என்பதும் உறுதியாக சொல்லவில்லை. எனது வேலையை பார்ப்பதற்கு சரியாக இருக்கிறது. மக்களுக்கு நல்லது செய்வதற்கு எதற்கு பயன்பட வேண்டும். வேண்டாம் என்பது இல்லை இப்போதைக்கு யோசனை இல்லை.

இதனை தொடர்ந்து படத்தை பார்த்துக்கொண்டிருந்தவர்களை சந்தித்த நடிகர் விஜய் ஆண்டனி படம் எவ்வாறு இருந்தது என கேட்டிருந்தார். அப்போது ரசிகர்கள் தல - தளபதிக்கு இசையமையுங்கள் என கேட்டதற்கு கண்டிப்பாக போட்டு விடுவோம் என கூறி சென்றார்.

 

 

செய்தியாளர் : ஹரிகிருஷ்ணன், மதுரை

Slug Name : MDU Vijay Antony Byte (Live U)

Lead :

Tags :
actorelection 2024news7 tamilNews7 Tamil UpdatesParlimentary ElectionPoliticsPRESS MEETRomeovijay Antony
Advertisement
Next Article