மீண்டும் சம்பாலில் கலவரமா? RSS அமைப்பினர் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தினரா? | உண்மை என்ன?
This news Fact Checked by ‘India Today’
சம்பாலில் முஸ்லிம்கள் மீது ஆர்எஸ்எஸ் அமைப்பினர் கல் வீசும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது இதுகுறித்த உண்மைத் தன்மையை இந்தியா டுடே உண்மை சரிபார்ப்பில் காணலாம்.
உத்தரபிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் உள்ள ஷாஹி ஜும்மா மசூதியில் நீதிமன்ற உத்தரவுப்படி கணக்கெடுப்பு நடத்த அதிகாரிகள் வந்தபோது அப்பகுதி மக்கள் எதிர்ப்புகளை தெரிவித்தனர். மசூதி அமைந்துள்ள இடத்தில் கோவில் இருப்பதாக கூறி சிலர் மனு தாக்கல் செய்ததையடுத்து, ஆய்வு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் சம்பாலில் நடைபெற்ற கலவரத்தில் முஸ்லிம்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டது போல் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. போலீசார் முன்னிலையில் சில இளைஞர்கள் கற்களை வீசி தாக்கும் காட்சிகள் பரப்ப்பப்படும் வீடியோவில் இடம்பெற்றுள்ளன.
"உ.பி.யின் சம்பாலில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் முஸ்லிம் வீடுகள் மற்றும் மசூதிகள் மீது கற்களை வீசி தாக்குதல் ; அதை கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறை அவர்களுடன் சேர்ந்து, முஸ்லிம் நிறுவனங்களை அழித்து வருகின்றனர் “ என்ற கேப்ஸனோடு அந்த வீடியோ பரவி வருகிறது.
உண்மை சரிபார்ப்பு :
இந்தியா டுடே நடத்திய விசாரணையில், பரப்பப்பட்ட வீடியோ தவறானது என்று கண்டறியப்பட்டது. இந்த காட்சி சம்பாலில் நடந்தது இல்லை என்றும் இது ஜூன் 21 அன்று ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடந்த மோதல் சம்பவத்தில் காட்சிகள் எனவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வைரலான வீடியோவின் முக்கிய கீஃப்ரேம்களைச் சரிபார்த்த பின் அதனை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலுக்கு உட்படுத்தியபோது அவை பல சமூக ஊடக பக்கங்களில் பகிரப்பட்டது
கண்டறியப்பட்டது. ஜூன் 22, 2024 அன்று, ராஜஸ்தானின் ஜோத்பூரில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது என்ற குறிப்புடன் இந்த வீடியோ themuslimlive3 இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதேபோல ஜூன் 23 அன்று ஜோத்பூரிலிருந்து பகிரப்பட்ட மற்றொரு X இடுகையிலும் இந்த வீடியோ பயன்படுத்தப்பட்டது. இந்த வீடியோ பகிரப்பட்ட இன்ஸ்டாகிராம் இடுகையின் ஸ்கிரீன் ஷாட் கீழே உள்ளது.
இதில் இருந்தே அந்த வீடியோ பழையது என்ற குறிப்பு கிடைத்தது. சம்பாலில் உள்ள மசூதி கணக்கெடுப்பு தொடர்பான பிரச்சனைகள் நவம்பர் 24 ஆம் தேதி தொடங்கும். பின்னர் ஜோத்பூரில் நடந்த மோதலைப் பார்த்தோம். ஜூன் 22, 2024 அன்று தி டைம்ஸ் சுர்சாகர் பிராந்தியத்தின் ராஜாராம் வட்டத்தில் உள்ள ஈத்காவில் ஒரு கேட் அமைப்பதில் மோதல் ஏற்பட்டது தெரியவந்தது.
ஜூன் 21 அன்று இரவு, உள்ளூர்வாசிகள் சிலர் கேட் கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால், வகுப்புவாத மோதல் வெடித்தது. கல் வீச்சு மற்றும் தீ வைப்புகளால் அப்பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டதாக் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜோத்பூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு போலீஸார் பலத்த காயமடைந்தனர். இந்த தீ விபத்தில் டிராக்டர் மற்றும் போலீஸ் ஜீப் எரிந்து நாசமானது. இந்த மோதலில் இரு தரப்பையும் சேர்ந்த 51 பேரை போலீசார் கைதுசெய்தனர், இதுகுறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது .ஜோத்பூர் மோதல் குறித்த NDTV யின் அறிக்கையில் வைரலான வீடியோவின் ஸ்கிரீன் ஷாட்டில் பயன்படுத்தப்பட்டது . இதேபோல ஜூன் 22 அன்று என்டிடிவி வெளியிட்ட செய்தியின் ஸ்கிரீன்ஷாட் கீழே உள்ளது.
ஜோத்பூர் மோதலின் பல்வேறு காட்சிகள் அடங்கிய வீடியோ அறிக்கையை இந்தியா டிவி பகிர்ந்துள்ளது. இதை கீழே காணலாம்.
இதற்கிடையில் , மசூதி தொடர்பான தொடர்பான மோதலைத் தொடர்ந்து சம்பாலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஷாஹி ஜும்ஆ மசூதியை சுற்றியுள்ள அனைத்து இடங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், சம்பாலில் இதுபோன்ற தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை. இதன் மூலம் கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, பரவி வரும் காணொளி சம்பாலில் இருந்து கிடைக்கப்பேற்றது அல்ல எனவும் ஜூன் 21 அன்று ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடந்த வகுப்புவாத மோதலில் இருந்து வெளியானது என்பது தெளிவாகிறது.
முடிவு :
சம்பாலில் முஸ்லிம்கள் மீது ஆர்எஸ்எஸ் அமைப்பினர் கல் வீசும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது இந்தியா டுடோவின் உண்மை சரிபார்ப்பில் வீடியோ உத்தரபிரதேச மாநிலம் சம்பாலில் நடைபெற்றது ஜூன் 21 அன்று ராஜஸ்தானின் ஜோத்பூரில் நடந்த வகுப்புவாத மோதலின் காட்சி என்பது உறுதியாகியுள்ளது.
Note : This story was originally published by ‘India Today’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.