தமிழ்நாடு, புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளதா?... வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்!
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை அறிக்கையை வானிலை ஆய்வு மையம் அப்டேட் கொடுத்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்திற்கான வானிலை தொகுப்பு:
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
கோடநாடு (நீலகிரி), பென்னாகரம் (தர்மபுரி) தலா 6, பையூர் AWS (கிருஷ்ணகிரி), நெடுங்கல் (கிருஷ்ணகிரி), பாரூர் (கிருஷ்ணகிரி) தலா 5, ஆம்பூர் (திருப்பத்தூர்), மேலாலத்தூர் (வேலூர்), தர்மபுரி (தர்மபுரி), தர்மபுரி PTO (தர்மபுரி), வாணியம்பாடி (திருப்பத்தூர்), நாட்றாம்பள்ளி (திருப்பத்தூர்) தலா 4, ஒகேனக்கல் (தர்மபுரி), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்), ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), டேனிஷ்பேட்டை (சேலம்), கேஆர்பி அணை (கிருஷ்ணகிரி), கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி), அரூர் (தர்மபுரி), ஆலங்காயம் (திருப்பத்தூர்), கெலவரப்பள்ளி அணை (கிருஷ்ணகிரி), குடியாத்தம் (வேலூர்), குண்டேரிப்பள்ளம் (ஈரோடு) தலா 3, மேட்டூர் (சேலம்), நடுவட்டம் (நீலகிரி), வரட்டுப்பள்ளம் (ஈரோடு), TCS மில் கேதாண்டபட்டி (திருப்பத்தூர்), ஜம்புகுட்டப்பட்டி (கிருஷ்ணகிரி), பாலவிடுதி (கரூர்), சேலம் (சேலம்), பாம்பார் அணை (கிருஷ்ணகிரி), சத்தியமங்கலம் (ஈரோடு), தாலுகா அலுவலகம் திருப்பத்தூர் (திருப்பத்தூர்), ஆனைமடுவு அணை (சேலம்), போச்சம்பள்ளி ARG (கிருஷ்ணகிரி),ஓமலூர் (சேலம்), திருப்பூர் PWD (திருப்பூர்) தலா 2, விரிஞ்சிபுரம் AWS (வேலூர்), ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி), செங்கம் (திருவண்ணாமலை), ஏற்காடு (சேலம்), விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி), பெனுகொண்டபுரம் (கிருஷ்ணகிரி), மாரண்டஹள்ளி (தர்மபுரி), சோத்துப்பாறை (தேனி), பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி), தேன்கனிக்கோட்டை ARG (கிருஷ்ணகிரி), தேவாலா (நீலகிரி), கேத்தி (நீலகிரி), கீழ்கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), பாலக்கோடு (தர்மபுரி), சங்கரி துர்க்கம் (சேலம்), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), கூடலூர் பஜார் (நீலகிரி) தலா 1.
அதிகபட்ச வெப்பநிலை :
அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் பொதுவாக இயல்பை விட மிக அதிகமாக இருந்தது. வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இயல்பை விட மிக மிக அதிகமாக இருந்தது. கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது. தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் வெப்ப அலை வீசியது.
அதிக பட்ச வெப்பநிலை கரூர் பரமத்தியில் 43.5° செல்சியஸ் (+7.2° செல்சியஸ்) ஈரோட்டில் 43.2° செல்சியஸ் (+5.7° செல்சியஸ்), திருச்சியில் (விமான நிலையம்) 42.7° (+4.6° செல்சியஸ்) மற்றும் மதுரையில் (விமான நிலையம்) 42.2° செல்சியஸ் (+4.6° செல்சியஸ்) பதிவாகியுள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை வேலூரில் 42.6° செல்சியஸ், திருத்தணியில் 41.6° செல்சியஸ், திருப்பத்தூரில் 41.4° செல்சியஸ், பாளையம்கோட்டையில் 41.2° செல்சியஸ், சேலம் & மதுரையில் 40.8° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
இதர தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 38° – 40° செல்சியஸ் பதிவாகியுள்ளது. தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35° – 38° செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 24° –30° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை சென்னை மீனம்பாக்கத்தில் 39.1° செல்சியஸ் (+1.5° செல்சியஸ்) மற்றும் நுங்கம்பாக்கத்தில் 35.9° செல்சியஸ் (-0.5° செல்சியஸ்) பதிவாகியுள்ளது.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:
தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.
07.05.2024:
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
08.05.2024:
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
09.05.2024:
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
10.05.2024 மற்றும் 11.05.2024:
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
12.05.2024:
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
13.05.2024:
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
07.05.2024 முதல் 11.05.2024 வரை:
அடுத்த 24 மணி நேரங்களுக்கு தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. 08.05.2024 முதல் 11.05.2024 வரை: அடுத்த 4 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும்.
07.05.2024 முதல் 11.05.2024 வரை:
அடுத்த 5 தினங்களுக்கு, தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2°-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். 07.05.2024: தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3°-5° செல்சியஸ் இயல்பை விட மிக அதிகமாக இருக்கக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 41°–43° செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 39°–40° செல்சியஸ், கடலோர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 36°–38° செல்சியஸ் இருக்கக்கூடும்.
ஈரப்பதம்:
07.05.2024 முதல் 11.05.2024 வரை: காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 40-55% ஆகவும், மற்ற நேரங்களில் 50-85% ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 55-85% ஆகவும் இருக்கக்கூடும்.
வெப்ப அலை பற்றிய முன்னெச்சரிக்கை:
07.05.2024:
தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
07.05.2024 மற்றும் 08.05.2024 வரை:
அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
07.05.2024: குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.