டெல்லியில் ஏற்பட்ட நிலநடுக்கம் என வைரலாகும் காணொலி உண்மையா? - Fact Check
This News Fact Checked by ‘Vishvas News’
டெல்லி-என்.சி.ஆரில், பிப்ரவரி 17 ஆம் தேதி அதிகாலை 5:36 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ஏற்பட்டது. இது தொடர்பாக, சமூக ஊடக தளங்களில் ஒரு காணொலி வைரலாகி வருகிறது. இந்த சிசிடிவி காட்சிகளில் நிலநடுக்கத்தின் தீவிரத்தைக் காணலாம். சில பயனர்களும் செய்தி வலைத்தளங்களும் இந்த காணொலி யை டெல்லி-என்.சி.ஆரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் வீடியோ எனக் கூறி பகிர்ந்து வருகின்றனர்.
"டெல்லி-என்.சி.ஆர். பகுதியில் ஏற்பட்ட வலுவான நிலநடுக்கத்தால், மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர். அதிகாலை 5:38 மணிக்கு பலத்த நிலநடுக்கம் உணரப்பட்டது.” எனக் குறிப்பிட்டார். மேலும் இந்த காணொலி டெல்லி-NCR இலிருந்து வந்ததாகக் கூறி Zee News மற்றும் Webdunia வலைத்தளங்களிலும் பதிவேற்றப்பட்டுள்ளது
உண்மை சரிபார்ப்பு :
வைரல் கூற்றை சரிபார்க்க, முதலில் டெல்லி-என்.சி.ஆரில் ஏற்பட்ட நிலநடுக்கம் பற்றி தேடினோம். இது தொடர்பான ஒரு பதிவு பிப்ரவரி 17, 2025 அன்று காலை 5:46 மணிக்கு தேசிய நில அதிர்வு மையத்தின் X பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இதன்படி, பிப்ரவரி 17 ஆம் தேதி காலை 5:36 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 4 என நிலநடுக்கம் ஏற்பட்டது. மேகும் இதன் மையப்பகுதி புது டெல்லிக்கு கீழே ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. இதன் பின்னர், பிப்ரவரி 17 அன்று காலை 8:02 மணிக்கு, பீகாரின் சிவானிலும் ரிக்டர் அளவுகோலில் 4 என நிலநடுக்கம் உணரப்பட்டது.
பிப்ரவரி 17 அன்று டைனிக் ஜாக்ரனின் வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட செய்தியின்படி , நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து டெல்லி காவல்துறை ஒரு உதவி எண்ணை வெளியிட்டுள்ளது. இதில் உயிர் அல்லது சொத்து இழப்பு ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.
இதற்குப் பிறகு நாங்கள் வைரலான காணொலியை கவனமாகப் பார்த்தோம். அதில் உள்ள தேதி பிப்ரவரி 15, 2025 மற்றும் நேரம் இரவு 10:48 மணி என இடம்பெற்றிருந்தது. அதே நேரத்தில் டெல்லி-NCR இல் நிலநடுக்கம் பிப்ரவரி 17 அன்று காலை 5:36 மணிக்கு ஏற்பட்டது. இதன் மூலம் இந்த வைரல் காணொலி டெல்லி-என்.சி.ஆரைச் சேர்ந்தது அல்ல என்பது தெளிவாகிறது.
பிப்ரவரி 15, 2025 அன்று தி டான் இணையதளத்தில் வெளியிடப்பட்ட செய்தியின்படி , இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டியில் இரவு 10:48 மணிக்கு 4.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதன் மையம் ராவல்பிண்டியிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக, டெல்லியில் உள்ள டைனிக் ஜாக்ரனின் தலைமை நிருபர் வி.கே. சுக்லாவை நாங்கள் தொடர்பு கொண்டோம். பிப்ரவரி 17 ஆம் தேதி காலை டெல்லியில் பூகம்பம் ஏற்பட்டதாக அவர் கூறுகிறார் , ஆனால் வைரல் காணொலியில் கொடுக்கப்பட்டுள்ள தேதி பிப்ரவரி 15 ஆகும். இது டெல்லி காணொலி அல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
முடிவு:
பிப்ரவரி 17, 2025 அன்று காலை 5:36 மணிக்கு டெல்லி-என்சிஆரில் நிலநடுக்கம் உணரப்பட்டது தொடர்பாக வைரலாகும் காணொலி பிப்ரவரி 15 அன்று பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காணொலியாகும்.
Note : This story was originally published by ‘Vishvas News’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.